பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

தமிழ் காத்த தலைவர்கள்

பொழிந்து நாடு வளம்பெற்றதும் மீண்டும் இங்கு வந்து சேருங்கள்' என்றும் கூறினான்.

புலவர்கள் பிறநாடு புகுதல்

பாண்டியன் கருத்தைப் புலவர்கள் அறிந்து வருந்தினர். வேற்று நாடு செல்வதற்கு எல்லாரும் விரைந்து புறப்பட்டனர். அவர்கள், தம்மை ஆதரிக்கும் அரசர்கள் உள்ள நாட்டைத் தேடிச் சென்றனர். அவர்கள் தமிழ் நாட்டின் பல இடங்களில் சென்று தங்கினர். தாம் தங்கிய இடத்திலேயே தமிழையும் வளர்த்துக்கொண்டு இருந்தனர்.

அரசன் சங்கத்தை அமைத்தல்

இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்தன. நாடு செழிக்குமாறு நல்ல மழை பெய்தது. பாண்டிய நாட்டில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஏரி குளங்கள் எல்லாம் நீரால் நிரம்பின. நிலம் எங்கும் பயிர்கள் செழித்து ஓங்கின. பாண்டிய நாட்டில் பஞ்சம் அடியோடு அகன்றது. மக்கள் வறுமை நீங்கிப் பெருமையுடன் வாழத் தொடங்கினர். அரசன் களஞ்சியத்தில் பொன்னும் மணியும் பொங்கிக் குவிந்தன. உடனே அவன் தமிழ்த் சங்கத்தைத் திரும்பவும் கூட்ட விரும்பினான். தமிழ்ப் புலவர்களை