பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

தமிழ் காத்த தலைவர்கள்

இறையனார் அகப்பொருள் எழுதுதல்

மதுரைத் திருக்கோவிலில் எழுங்தருளிய இறைவர், அரசன் கவலையை அறிந்தார். 'அவனது கவலை கல்வியைப் பற்றியதாக இருக்கிறது; ஆதலின் நாம் அதனைத் தீர்க்க வேண்டும்' என்று திருவுளம் கொண்டார். மூன்று செப்புத் தகடுகளை எடுத்தார். அவற்றில் அறுபது சிறு செய்யுட்களை எழுதினார். அதற்கு 'இறையனார் அகப்பொருள்' என்று பெயரிட்டார். அத்தகடுகளைத் தம்பீடத்தின் அடியில் வைத்தார்.

அந்தணன் கையில் அகப்பொருள்

மறுநாள் காலையில் வழக்கம் போல் திருக்கோவில் திறக்கப்பட்டது. அங்கு வழிபாடு செய்யும் அந்தணன் வந்தான். அவன் இறைவர் இருக்கும் இடத்தைத் துப்புரவு செய்தான். அப்பொழுது அவன் கையில் செப்புத் தகடுகள் மூன்றும் கிடைத்தன. அந்தணன் அவற்றை எடுத்து வாசித்துப் பார்த்தான். தலைப்பில் 'இறையனார் அகப்பொருள்' என்று எழுதியிருப்பதைக் கண்டான். "பாண்டியன் பொருள் இலக்கணம் பெற முடியாமல் பெரிதும் வருந்துகிறான்; அவன் கவலையைப் போக்க இறைவரே திருவருள் செய்திருக்கிறார்.