பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

தமிழ் காத்த தலைவர்கள்

அப்பெருமானுடைய திருவருளை எவ்வாறு போற்றுவேன்! அவர் தமிழைக் காத்த கருணையை எங்ஙனம் துதிப்பேன்!' என்று ஆடிப் பாடினான். மதுரைத் திருக்கோவிலுக்குச் சென்றான். அங்கு எழுந்தருளிய சொக்க நாதராகிய இறைவரைத் தரையில் விழுந்து வணங்கினான். 'அகப்பொருள் இலக்கணத்தை அருளிய இறைவரே! நீர் என்றும் எங்கள் தமிழ்மொழியைக் காத்தருள வேண்டும் என்று பணிந்து வேண்டினான்.

பாண்டியன் உரை எழுதுமாறு வேண்டுதல்

பின்பு பாண்டியன் அத்தகடுகளை எடுத்துக்கொண்டு தமிழ்ச் சங்கத்தை அடைந்தான். அங்கு இருந்த தமிழ்ப் புலவர்களிடம் அவற்றைக் கொடுத்தான். 'இஃது இறையனார் அருளிய அகப்பொருள் இலக்கண நூல்; நீங்கள் இந்நூலுக்கு நல்ல உரையினை ஆராய்ந்து வரையுங்கள்' என்று வேண்டினான். இறையனார் அகப்பொருளைக் கண்ட புலவர்கள் அளவற்ற இன்பம் அடைந்தார்கள். அதற்கு ஒவ்வொருவரும் உரை எழுதத் தொடங்கினார்கள்.

பொதுநலப் பணியின் பெருமை

இவ்வரலாற்றால் நாம் அறிவது என்ன ? பாண்டிய மன்னன் பைந்தமிழைக் காக்க