பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3. உரைகண்ட உத்தமன்

மதுரையில் உப்பூரிகுடி

முற்காலத்தில் பாண்டிய நாட்டின் தலைகநரமாக மதுரைமாநகரம் விளங்கியது. மதுரம் என்ற சொல்லுக்கு இனிமை என்பது பொருள். அந்நகரம் மக்கள் வாழ்வதற்கு மிக்க இனிமையானது. ஆதலின் அது மதுரை என்று பெயர் பெற்றது. இம் மதுரைமாநகரின் ஒரு பகுதியில் வணிகர் பலர் சேர்ந்து வாழ்ந்தனர். அப்பகுதிக்கு உப்பூரிகுடி என்று பெயர்.

வணிகர் தலைவரின் வருத்தம்

உப்பூரிகுடியில் வாழ்ந்த வணிகர்களுக்குத் தலைவர் ஒருவர் இருந்தார். அவர் பெரிய செல்வர் ; ஒழுக்கத்திலும் அறிவிலும் உயர்ந்தவர். அவரை எல்லாரும் உப்பூரிகுடி கிழார் என்றே சொல்லுவர். அவர் வாணிகத்தால் மிகுந்த செல்வத்தைத் தேடினார். ஆனால் அவருக்கு நீண்ட நாட்களாகப் பிள்ளைச் செல்வம் இல்லை. அறிவுடையோர் மக்கட் செல்வத்தையே சிறந்த செல்வமாக மதிப்பர். அச்செல்வம் இல்லாதவன் மற்றச் செல்வங்களையெல்லாம் பெற்றிருந்தாலும் பயன்