உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உரைகண்ட உத்தமன்

17

உள்ளான்; அவன் உருத்திரசன்மன் என்னும் பெயரை உடையவன்; அவன் ஐந்து வயதுச் சிறுவன்; ஊமைப் பிள்ளை ; அவன் முருகன் அவதாரம் ; அவனை அழைத்து வந்து சங்கப் பலகையில் இருத்துங்கள் ; புலவர்கள் எல்லாரும் தத்தம் உரையை அவன் முன்னால் அமர்ந்து சொல்லுங்கள் ; உண்மையான உரை கேட்டபொழுது உள்ளம் மகிழ்வான்; ஆனங்தக் கண்ணீரைச் சொரிவான்; அவன் உடம்பில் உள்ள உரோமங்கள் சிலிர்க்கும் ; பொய்யான உரை கேட்டபொழுது சும்மா இருப்பான்.” இவ்வாறு அந்த ஒலி மூன்று முறை கேட்டது. அதனை அரசனும் புலவர்களும் நன்றாகக் கேட்டனர். உடனே அவர்கள் எல்லாரும் அவ்வாறே செய்வோம் என்று இசைந்தனர்.

சங்கப்பலகையில் உருத்திரசன்மன்

சங்கப் புலவர்கள் அனைவரும் புறப்பட்டு உப்பூரிகுடியை அடைந்தனர். அங்கு வாழ்ந்த வணிகர் தலைவராகிய உப்பூரிகுடி கிழாரைக் கண்டனர். அவர்கள் தாம் வந்த செய்தியை அவருக்கு அறிவித்தனர். தெய்வக் குழந்தையாகிய உருத்திரசன்மனைத் தந்து உதவ வேண்டும் என்று அன்புடன் வேண்டினர். அவரது இசைவைப் பெற்று உருத்திரசன்