பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4. தமிழ் வளர்த்த வழுதி

வழுதியின் வல்லமை

கடைச் சங்க காலத்தில் உக்கிரப் பெருவழுதி என்னும் மன்னன், பாண்டிய நாட்டை ஆண்டு வங்தான். வழுதி என்பது பாண்டியரைக் குறிக்கும் பெயர்களுள் ஒன்றாகும். அவன் மதுரைமா நகரைத் தலைநகராகக் கொண்டு, தன் நாட்டை நன்முறையில் ஆண்டான். அவன் பகைவருக்கு அஞ்சாத நெஞ்சுத் துணிவு உடையவன். போர் புரிவதில் தேர்ச்சி பெற்ற திறல் வீரன். அதனால் பாண்டிய நாட்டில் இருந்த சிற்றரசர்கள் எல்லாரும் அவனுக்கு அடங்கி நடந்தனர். உரிய காலத்தில் கப்பப் பொருளைத் தப்பாது செலுத்தி வந்தனர்.

கானப்பேர்க் கோட்டை

பாண்டிய நாட்டில் கானப்பேர் என்பது ஒர் ஊர். இக்காலத்தில் அது காளையார் கோயில் என்று வழங்கப்படுகிறது. அவ்வூரை வேங்கை மார்பன் என்னும் சிற்றரசன் ஆண்டு வங்தான். அவன் மிக்க வீரம் உடையவன். அவன் தன் ஊரைச் சுற்றி மிகவும் ஆழமான அகழியைத் தோண்டி இருந்தான். வானத்தை முட்டும் உயரமான மதிலைக் கட்டி இருந்தான். அவற்றைச் சுற்றி மரங்கள்