பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கத் தலைவர் நக்கீரர்

27

களிடம் சிலர் வடமொழியைக் கற்று வந்தனர். அவ்வாறு கற்றவர்களில் கொண்டான் என்பவனும் ஒருவன். அவன் குயவர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் சில ஆண்டுகள் வடமொழியைப் படித்தான். தன் தாய்மொழியாகிய தமிழை மறந்தான். அதன் சிறப்பை அறியாது இகழ்ந்தான். அவனுக்கு வட மொழிப்பற்றுப் பித்தாகப் பெருகியது.

கொண்டான் பறை சாற்றல்

ஒரு நாள் அக்கொண்டான் பறை ஒன்றைத் தன் கழுத்தில் தொங்கவிட்டான். மதுரை மாநகரின் தெருக்கள் வழியாக அதனை அடித்துக்கொண்டே வந்தான். கூட்டம் திரளாகக் கூடிய இடத்தில் நின்றான். மக்களே ! ஆரியம் நல்லது ; தமிழ் தீயது : எல்லாரும் ஆரியத்தைப் படியுங்கள்' என்று சொல்லிப் பறையை ஓங்கி அடித்தான். இவ்வாறு பல தெருக்களிலும் உரக்கக் கத்திக் கொண்டே வந்தான்.

சங்கத்தின் முன்னர் கொண்டான்

கொண்டான் அடித்த பறை ஒசை கேட்டு, மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னர் மக்கள் திரளாகக் கூடினர். அக்கூட்டத்தின் நடுவே நின்ற கொண்டான், 'ஆரியம் நன்று,