பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தமிழ் காத்த தலைவர்கள்

பிச்சை கொடுத்திருக்கிறார். அதனால் நீ உயிர் பெற்று எழுந்தாய். இல்லையேல் உன்னை நாங்கள் இழந்திருப்போம். நக்கீரர் அடிகளில் விழுங்து வணங்குவாய். நீ அறியாது. செய்த பிழையைப் பொறுத்து அருள வேண்டுவாய் ' என்று அன்புடன் கூறினாள்.

கொண்டானுக்கு அறிவுரை

அது கேட்ட கொண்டான் மனம் மாறியது. அவன் ஒடிச் சென்று நக்கீரரை வணங்கினான். தன்னை மன்னிக்குமாறு பணிவுடன் வேண்டினான். மீண்டும் பறையை அடிக்கத் தொடங்கினான். 'ஆரியம் தீது தமிழ் நன்று' என்று மாற்றி முழங்கினான். அதைக் கேட்ட நக்கீரர் மனம் குளிர்ந்தார். அவனைத் திரும்பவும் அருகில் அழைத்தார். நீ இனிமேல் பிறமொழியைப் பழிக்காதே : தாய்மொழியைப் போற்றுக' என்று அன்புடன் வேண்டினார். அன்று முதல் கொண்டான் தண்டமிழை ஆர்வமுடன் கற்கத் தொடங்கினான். சில ஆண்டுகளில் தமிழில் பெரும்புலவனாக விளங்கினான்.

உணர்த்தும் உண்மைகள்

இவ்வரலாற்றால் நாம் அறிவது என்ன ? தகாத செயலைச் செய்வோர் சரியான தண்