பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அ ணி ந் து ரை

ஒருவன் உயர்ந்த கலைஞனாவும் அறிஞனாகவும் விளங்குவதற்கு அவனுடைய தாய்மொழியே அடிப்படையாக அமைகின்றது. அத்தகைய தாய்மொழியிடத்தே தணியாத பற்று, எல்லோருக்கும் எழுதல் வேண்டும். மாணவர்க்கு இளம் பருவத்திலேயே தாய் மொழிப் பற்றை உண்டு பண்ண வேண்டுவது இன்றியமையாத செயலாகும். அதற்குத் தாய்மொழிப் பற்றுக்கொண்டு தொண்டாற்றிய தலைவர்களின் வரலாற்றைப் படிப்பது பெரும்பயனை விளக்கும். இந்நோக்கத்துடன் ஆக்கப்பெற்றதே ‘தமிழ் காத்த தலைவர்கள்’ என்னும் இச்சின்னூலாகும். இஃது உயர்நிலைப்பள்ளியின் கீழ்வகுப்புக்களிற் பயிலும் இளமாணவர்க்கு ஏற்றவாறு எளிய நடையில் எழுதப் பெற்றுள்ளது. இச்சிறு பணியினை எளியேற்கு வழங்கி ஆதரித்த கழக ஆட்சியாளர்க்கு நன்றி.

இதனைக் கண்ணுறும் கலாசாலைத் தலைவர்களும் தமிழ்ப்பணியாற்றும் புலவர் பெருமக்களும் இச்சிறு நூலைத் தத்தம் பள்ளிகளில் பாட நூலாக்கி, எளியேனது தமிழ்ப்பணிக்கு ஊக்கம் ஊட்டுமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.

தமிழ் வெல்க !

அ. க. நவநீதகிருட்டிணன்