பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கப் புலவர் சாத்தனார்

39

அதனைச் சாத்தனார் வாங்கி வாசித்துப் பார்த்தார். அதனைப் பல முறைகள் வாசித்து இன்புற்றார். அதனுடைய அருமையையும் இனிமையையும் கண்டு வியந்தார். இன்றோடு என் தலைவலி நீங்கியது என்று சொல்லி எழுந்தார். பாண்டிய மன்னனிடம் அங் நூலைக் கொண்டுபோய்க் கொடுத்தார். அந்நூலின் சிறப்பையெல்லாம் விளக்கிக் கூறினார். இதனை இயற்றியவர் தெய்வப் புலமை உடையவர் என்று மனமுவந்து பாராட்டினார்.

உலகப் பொதுமறை

உடனே பாண்டியன் அந்நூலைத் தன் அரசவையில் அரங்கேற்ற வேண்டினான். திருவள்ளுவர் பாண்டியன் அவையில் அதனை வாசித்துக் காட்டினார். அதில் அமைந்துள்ள சிறந்த கருத்துக்களை விளக்கிக் கூறினார். அரசனும் புலவர்களும் அவற்றைக் கேட்டு வியந்தனர். இந்நூல் தமிழருக்கு இணையில்லாத பெருமையைத் தரும் என்று போற்றினர். இங் லால் இனிய தமிழ்மொழி, உலகம் முழுவதும் பரவும் என்று மகிழ்ந்தனர். இந் நூல் உலகப் பொதுமறை என்று போற்றிப் புகழ்ந்தனர்.