பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. தமிழ்ச் சங்கம் அமைத்த தலைவர்

சேது நாடு

பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாய் விளங்குவது சேதுநாடு. இராமநாதபுரமும் அதைச் சூழ்ந்த நிலப்பகுதிகளுமே சேதுநாடு என்று குறிக்கப்பெறும். இராமபிரான் இராவணனை வென்று சீதையை மீட்டுவர இலங்கைக்குச் சென்றான். கடல் நடுவே அமைந்த இலங்கையை அடைவதற்கு அவன் 'சேது' என்னும் அணையைக் கட்டினான். அச் சேதுவைத் தன்பால் கொண்ட நாடே சேது நாடு எனப்பட்டது.

சேதுக் காவல்பூண்ட சேதுபதி

இத்தகைய சேதுநாட்டில் மறவர் குல மக்கள் மிகுதியாக வாழ்கின்றனர். முற்காலத்தில் மறவர்குலத் தலைவராக விளங்கிய ஒருவர் அச்சேதுவைக்காக்கும் காவல் தலைமை பூண்டார். அவரே சேதுபதி என்னும் பெயர் பெற்றார். அச்சேதுவையடுத்து இராமன் பூசித்து வழிபட்ட இராமேச்சுவரம் என்னும் தலம் உள்ளது. அஃது இந்துக்கள் போற்றி வழிபடும் புண்ணியத் தலமாகும். அதனையடுத்துத் திருப்புல்லாணி, உத்தர