பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

தமிழ் காத்த தலைவர்கள்

 பற்றி ஆராய்வார். சிறந்த கருத்துக்களை எடுத்துரைப்பார். பிற புலவர்கள் சொல்லும் அரிய கருத்துக்களைக் கேட்டு மகிழ்வார். இனிய செய்யுட்களை இயற்றுவார். இவ்வாறே பாண்டித்துரைத் தேவர் தம்காலத்தை இனிய முறையில் கழித்துவந்தார். இவர் இராமநாதபுரம் மன்னராக விளங்கிய பாஸ்கர சேதுபதிக்கு வலக்கை போன்று விளங்கினார். சேதுபதியிடம் பரிசுபெற விரும்பும் புலவரும் கலைஞரும் முதலில் தேவரிடம் தம் திறமையைக் காட்டிப் பரிசு பெற்று வரவேண்டும். தேவர் மதித்துப் பாராட்டிய புலவர்களுக்கே சேதுபதியின் அரசவையில் வரவேற்பு உண்டு.

இராகவ சிங்கங்கள்

தேவர் தமிழ்ப்பெரும் புலவர்களான ரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார் என்னும் இருவரையும் பெரிதும் ஆதரித்தார். தமக்குக் கம்பராமாயணம் கற்பித்த ஆசிரியர் முத்துச்சாமி ஐயங்காரின் மகனார் மு. இராக வையங்கார் என்ற முறையால் அவருடைய தமிழ்க் கல்வி வளர்ச்சிக்குத் தேவர் பேருதவி புரிந்தார். இவ்விரண்டு இராகவ சிங்கங்களும் சேதுவேந்தரின் அவைக்களப் புலவர்களாகச் சிறந்துவிளங்கினர்.இவ்விருவரும்இரட்டைப்