பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ச்சங்கம் அமைக்க தலைவர்

69

மாணவர் புலர் தமிழைப் பயிலத் தொடங்கினர். மதுரையில் செந்தமிழ் மீண்டும் செழித்து ஓங்கத் தொடங்கியது.

சுகாத்தியர் திருக்குறள்

இங்ஙனம் சங்கம் அமைத்த தலைவராகிய பாண்டித்துரைத் தேவர், அளவிலாத் தமிழ்ப் பற்று உடையவர். பிழைபடப் பேசுவதையும் எழுதுவதையும் பெரிதும் வெறுப்பவர். பிழைகளையுடைய நூல்களைக் கையால் தொடவும் கூசுவார். இத்தகைய தேவரை ஒருகால் "ஸ்காட்" என்னும் துரைமகனார் காண்பதற்கு வந்தார். அவர் தேவரிடம் ஒரு நூலைக் கொடுத்தார். அழகிய முறையில் அச்சிடம் பெற்றிருந்த அப்புத்தகத்தின் உறையில் 'சுகாத்தியர் திருத்திய திருக்குறள்' என்று பொறித்திருந்தது. அப் பெயரைப் பார்த்ததுமே தேவருக்குச் சினம் எழுந்தது. அப் புத்தகத்தைத் திறந்து பார்த்தார். முதல் குறளிலேயே திருத்தம் செய்யப்பட்டு இருந்தது.

"அகர முதல எழுத்தெல்லாம்;ஆதி
பகவன் முதற்றே உலகு"

என்பதுமுதற்குறள். அதன் இரண்டாவது அடியினை,

த. கா. த -6