பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 கவிஞர் கு. சா. கி.

இவர்கள் அத்துணை பேர்களிடமும் பழகியும், உடன் நடித்தும் அனுபவம் பெற்றுத்தான் கூறுகின்றேன்; இனி அத்தகைய மாமேதைகளைத் தமிழ்நாடக அரங்கில் காணும் நாள் எந்நாள்? என்ற ஏக்கப் பெருமூச்சுத்தான் எழுகின்றது!

தெலுங்கு நாடகங்களும் ஆசிரியர்களும்

1891-ம் ஆண்டு சென்னையில், பெல்லாரி கிருஷ்ணமாச் சார்லு என்னும் வழக்கறிஞர் நடத்திய நாடகங்களைக் கண்டு "ம்மல் சம்பந்த முதலியாருக்கு நாடகப் பற்று மிகுந்ததும், சுகுண விலாஸ் சபாவின் தோற்றமும் குறித்து முன்பே சொன்னேன்.

இதற்குப்பின் தெலுங்கில் பல நாடகக் குழுக்கள் தோன்றின. பெரும்பாலும் புராண நாடகங்கள்தான்; வசனத் திற்குப்பதில் எல்லாம் பத்தியங்கள்தான் (விருத்தங்கள்) நிறைந்திருக்கும். -

இருபதாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தெலுங்கு நாடக மேடையிலும் மறுமலர்ச்சி தோன்றலாயிற்று.

கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு, பானுகெண்டி லட்சுமி நரசிம்மராவ், குரஜாட அப்பாராவ், ஆசுகவி திருப்பதி வெங்கடகவிலு, வேதம் வெங்கடராய சாஸ்திரி, பெல்லாரி ராகவாச்சார்லு, பலிஜேபல்லி லட்சுமிகாந்தகவி, நீதிபதி ராஜமன்னார் ஆகியோர் புதுமையும் புரட்சியும் மிக்க பல நாடகங்களை யாத்தளித்து, தெலுங்கு நாடக உலகை உயர்த் தினார்கள்.

திரைப்படத்துறையில் வெற்றிகண்ட, அர்த்தங்கி பூரீராமமூர்த்தி, பாருபல்லி கப்பாராவ், வேமுரி கக்கையா, எடவல்லி சூரியநாராயணா, கே. ரகுராமய்யா, சி. எஸ்.ஆர், கே. ராமநாத சாஸ்திரி, பி.வி. சுப்பாராவ், ஆர். நாகேஸ்வர ராவ், பி. கண்ணாம்பா, பூரீரஞ்சனி, ராமதிலகம், காஞ்சன மாலா, அஞ்சலிதேவி, சூரியபாபூ, மிர்ஸாபூர் கிருஷ்ண