பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



58

கவிஞர் கு.சா.கி.

58 கவிஞர் கு. சா. கி.

இன்று நான் நிகழ்த்திக்கொண்டிருக்கும் அறக் கட்டளைச் சொற்பொழிவு, நாடகப் பெரும் பேராசிரியர் உயர்திரு பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் நினைவின் முகத்தான் நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.

இந்த அறக்கட்டளையை ஏற்பாடுசெய்த பெருந்தகை, நாடகக் கலையுலகச் சக்ரவர்த்தி, முத்தமிழ்க் கலா வித்வ ரத்னம், தி.க. சண்முகம் அவர்கள் என்ற செய்தியையும் நன்றியறிதலுடன் இங்கு நினைவு கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இவ்விரு கலைமாமணிகளின் ஆற்றல், அறிவு, அடக்கம், ஒழுக்கம், பண்பு, அன்பு, சேவை, ரசனை, நாடகக்கலை வளர்ச்சிக்காக இறுதி மூச்சிருக்கும்வரை சலியாது உழைத்த உழைப்பு ஆகிய நற்குணங்களையெல்லாம் நன்கு உணர்ந்த பெருமக்கள் பலர், இந்த அவையில் வீற்றிருப்பதைக் காணுகின்றேன்.

'பாம்பின் கால் பாம்பறியும்' என்ற மூதுரையின்படி நாடகக் கலைக்கென்றே வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திருந்த திரு. அவ்வை சண்முகம் அவர்கள், தமிழ் நாடக மறுமலர்ச்சிக்கு முதன்முதலாக வித்திட்டு அளப்பருந் தியாகங்கள்செய்து புதுவாழ்வளித்த இரு பெரும் நாடகாசிரியர்களை தேர்ந்தெடுத்துத் தனது மணிவிழாக் காணிக்கையாக, சென்னைப் பல்கலைக்கழகத்தில், திரு. பம்மல் சம்பந்த முதலியார் அவர்களுக்கும், மதுரை பல்கலைக் கழகத்தில் தவத்திரு து.தா. சங்கரதாஸ் சுவாமிகளுக்குமாக இரண்டு அறக்கட்டளைகளை ஏற்பாடு செய்து, தனது லட்சியக் கனவை நிறைவேற்றிக் கொண்டதன் மூலம், தமிழகத்தில் நாடகக் கலை நிலைத்திருக்கும்வரை பம்மல் சம்பந்தனார் புகழும், தவத்திரு. சுவாமிகளின் புகழும் நிலைத்திருக்குமாறு செய்ததுடன், தனது புகழையும் நிலைநிறுத்திக்கொண்டார் என்று சொன்னால், அது மிகையாகாது.