பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கவிஞர் கு. சா. கி.

நடிப்புக் கலை. ஒரு அரசன், அரசனுக்குரிய ஆடம்பர உடைகள், அணிமணி, முடி அலங்காரங்களுடன், காவலர்கள் கட்டியங்கூற, ஏவலர்கள் நடை பாவாடை விரிக்கக் கம்பீரமாகக் கொலு மண்டபத்துள் வரும் காட்சியைக் கண்டு, நாம் பிரமித்துப் பாராட்டுவதில்லை.

ஆனால் அதேகாட்சியை ஒரு தலைசிறந்த நடிகன் திறம் பட நடித்துக் காட்டும்போது நாம் வியப்படைகிறோம்!

அப்படியே, ஓர் ஆண் மகன், பெண்வேடம் புனைந்து திறம்பட நடிக்கும் போதும்,

ஒரு பெண், ஆண்வேடம் புனைந்து திறம்பட நடிக்கும் போதும், ஒரு இளைஞன்-ஒரு முதியவனுக்குரிய தள்ளா மையைத் திறமையாக நடித்துக் காட்டும் போதும்,

ஒரு முதியவன்-ஒரு இளைஞனுக்குரிய மிடுக்கோடுசிறப் பாக நடிக்கும் போதும், நாம் நம்மை மறந்து அவர்களின் நடிப்பாற்றலில் ம ய ங் கி, அவர்களைப் பாராட்டிப் புகழுரைகள் சூட்டி மகிழுகின்றோம்.

இப்படிப் பல்வேறு பாத்திரங்களைத் தாங்கி, அந்தப் பாத்திரமாகவே மாறி அற்புதங்கள் நிகழ்த்தும் நடிகனின் திறத்தில்தான் நாடகத்தின் வெற்றியே வெளிப்படுகின்றது. ஒரு ஊமையனும், வேறொரு பேசும் திறம்பெற்ற ஒருவனும், ஏதோ ஒரு நிகழ்ச்சியைப்பற்றி ஒருவருக் கொருவர் பரிமாறிக்கொள்ளும்போது, அங்கே அவர்கள் இருவருமே ஊமையர்களாய் மாறிப் பேச்சுக்கே அவசிய மின்றி வெறும் சைகைகளால் ஒருவருக்கொருவர் விஷயங்களை விளக்குவதையும், விளங்கிக்கொள்வதையும் காணுகின்கிறாம். இங்கேயும் நடிப்புக் கலையைத்தான் காணு கின்றோம்.

தனக்குப் பிடிக்காத ஒரு அகம்பாவக்காரனையோ, அல்லது ஆடம்பரக்காரனையோ பற்றி மற்றவனுக்கு விளக்கிக் கூறும் போதும், அல்லது ஒரு நொண்டி, கூனன்,