பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நக்கீரர். வெண்பா. முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி பரணர் கபிலரும் வாழி-அரணிலா ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோ ஆனக்தஞ் சேர்கசுவா கா. [ւ-6Շr நக்கீார் நாடத்துக் குயக்கொண்டானச் சாவப் பாடியது. குறிப்பு-மதுரையில் இருந்த பட்டிமண்டபத்துத் தெற்குவாயிற் கதவு ஒருகால் திறவாதாக, நக்கீரர் தமது தமிழ்ப்பாட்டால் திறப் பித்தார். அதுகண்ட பட்டிமண்டபத்தார் வியப்புற்றனர். அவர் பொருட்டு நக்கீரர் செந்தமிழால் ஒருவனேச் சாவவும் பிழைக்கவும் பாடக்கூடும் என்றனர். பட்டி மண்டபத்தார் தலைவனுக இருந்த குயக்கோடன் அங்ஙனம் வாழவும் சாவவும் செய்ய வல்லது ஆரியமேயன்றித் தமிழன் றென்ருன். அவனே சாவவும் பிழைக்கவுமாக நக்கீரர் இப்பாட்டையும் இதனையடுத்து வரும் பாட்டையும் பாடினர். இந்நூலே முதற்கண் பதிப்பித்த தில்லை. நடேசச் செட்டியார் அவர்கள், தெற்கண் வாயில் திறவாப்பட்டி மண்டபத்தார் வடமொழிச் சங்கத்தார்' என்றும், இதல்ை, கொண்டான் என்னும் குயவன் மதுரையில் வடமொழிச் சங்க மொன்றில் தலைவனுயிருந்து தமிழை இகழ்ந்தன னென்பதும், நக்கீரர் அவனைச் சாவவும் பின் வாழவும் பாடித் தமிழின் பெருமை புலப்படச் செய்தா ரென்பதும் விளங்கும்' என்றும் குறிக்கின்ருர், குயக்கொண்ட்ான் என்றும், அரணிய வென்றும் பாடவேறுபா டுண்டு. ஆசிரியர் பேராசிரியர், ! நிறைமொழி. மாந்த ராணேயிற் கிளந்த, மறைமொழி தானே மந்திர மென்ப" (தொல். செய். 178) என்பதன் உரையில் இப்பாட்டையும் இதனே யடுத்துவரும் பாட்டையும் காட்டி, இவை தெற்கண் வாயில் திறவாத பட்டிமண்டபத்தார்பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழ வும் சாவவும் பாடிய மந்திரம் அங்கதப் பாட்டாயின' என்று கூறியுள்ளார்.