பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மூன்று நாவல்கள்

97

யெல்லாம் கல்யாணிக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்பதிலும், தான் படிப்பதிலும், தன்னை வாத்தியாராகப் கொண்டு தன் வீட்டில் வந்து கற்கும் ஏழெட்டுக் குட்டிகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுப்பதிலும் கழிக்கிறாள்; அன்றியும் தன் செலவு தன் தம்பி வீட்டோடாகத் தனக் கென்று வேறாக இருக்கும் சொத்தின் வருமானத்தை யெல்லாம் தருமத்தில் செலவிடுகிறாள்.’[1]

கல்யாணி

கோபாலன் மனைவி கல்யாணி, அவள் தன் தகப்பனாருக்குக் கடைக்குட்டி செல்லமாக வளர்ந்தவள். தன் கணவன் மனத்துக்கு ஏற்றபடி தான் நடக்காமல், தன் மனத்துக்கு ஏற்ப அவன் நடக்க வேண்டுமென்று விரும்புகிறவள்; அதை வற்புறுத்துகிறவள். எடுத்ததற் கெல்லாம் கோபம் கொண்டு ஊடுகிறாள். அதனால் கோபாலனைப் பிரிந்து வாழ நேருகிறது. கோபம் இருந்தாலும் அவனிடம் உள்ள அன்பு மாறுவதில்லை. அவன் நடத்தைக் குறையுள்ளவனாக இருப்பதை அறிந்து கோபம் மூள்கிறது; அவன் திருந்தித் தன்னிடம் வந்தபோது சீறுகிறாள். கடைசியில் அவனுடைய சமாதானங்களால் ஆறி மனமும் மாறி அமைதியான நிலையை அடைகிறாள்.

பாத்திரங்களின் குணத்தைத் தனியே தொகுத்துச் சில இடங்களில் ஆசிரியர் சொல்கிறார். அவற்றைக் கதையினூடே இழைத்துப் புலப்பட வைத்திருந்தாலே போதும்.

டாக்டர் மில்லர்

ழகாக வருணிக்கத் தெரிந்தவர் ஆசிரியர். கிறிஸ்துவக் கல்லூரித் தலைவராகிய டாக்டர். மில்லரின்


  1. ப. 315.