பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மூன்று நாவல்கள்

57


கர்ளுமிர்தமாகப் பிரசங்கித்தார்கள் என்றே ஆசிரியர் எழுதுகிறார். வேண்டுமென்றே இந்தப் பிரசங்கத்தை அவர் அமைத்திருக்கிறார் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டிய தில்லை. இப்படியே, உபாத்தியாயர் சோதிடம் பொய் யென்று பிரசங்கம் செய்கிறார். 'உபாத்தியாயர் செய்த பிரசங்கத்தைக் கேட்டவுடனே, என்னைப் பிடித்திருந்த சாஸ்திரப் பேய் பறந்தோடி விட்டது என்று எழுதுகிறார் ஆசிரியர். அந்த உபாத்தியாயர் கல்வியின் பயன் கடவுளைப் பணிதல் என்பதை "அமிர்த வருஷம் போலப் பிரசங்கிக்கிறார் ஞானம்பாள், குண அழகு அழகேயன்றி முக அழகு அழகல்ல என்று 'பிரசங்கிக்கிறாள். இந்தப் பிரசங்கங்க ளெல்லாம் அத்தியாயத்தின் இடையே சில பகுதியை அடைத்துக்கொள்கின்றன. - -

இவற்றையன்றி முழு அத்தியாயமாக வரும் நீதி உபதேசங்கள் வேறு நாவலின் பிற்பகுதியில் உள்ளன. 32-ஆம் அத்தியாயம் இராக் கொள்ளைக்காரன் பகல் கொள்ளக்காரர்களை வெளிப்படுத்தியது என்ற தலைப்பு டையது. ஒரு திருடனே ஆதியூர்த் தேவராஜ பிள்ளையின் முன் பிடித்துக்கொண்டு வருகிறார்கள். ஒருவன் தன் துணி யில் ஒரு ரூபாய் முடிந்திருந்தான். அந்த முடிச்சை அந்தத் திருடன் கத்திரித்துக் கொண்டான். அவன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு, பெரிய சொற்பொழிவே நடத்த ஆரம்பித்து விடுகின்றான் இப்போது நான் ஒரு ரூபா திருடினதற்காக என்னைத் தண்டிக்கப் போகிறீர்கள். நான் அந்தத் தையற் காரனிடத்தில் ஒரு ரூபா கடன் வாங்கிக்கொண்டு பிறகு அதைக் கொடாமல் மோசம் செய்திருப்பேணாணால் என்னேத் தண்டிப்பீர்களா? பிரதி தினமும் ஆயிரம், பதியிைரம்,

1. ப. 4.5. 2. ப. 82. 3. u. 46.8. 4. L. 83°4. .5. ப. 142-59.