உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தொல்காப்பியம்

11


வேதத்தால் அறியக்கிடக்கிறது. அம்மக்கள் பழந்தமிழ் மக்கள் என்று சில ஆராய்ச்சிக்காரர் கூறுப. பழந்தமிழ் மக்கள் எங்கு வாழ்ந்தவர்களாயினுமாக. அதைப்பற்றிய விரிந்த ஆராய்ச்சி ஈண்டு எற்றுக்கு? ஈண்டு நமது ஆராய்ச்சிக்குச்சிறப் பாக ஒன்று தேவை. அஃதென்னை? அது, பழந்தமிழ் மக்களின் (அதாவது புத்தர் பெருமானார்க்கு முன்னர் இருந்த தமிழ் மக்களின்) சமயநிலை என்னை என்பதே. இதுகுறித்தே ஈண்டு முதலில் தொல்காப்பியம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
தொல்காப்பியத்துள் போந்துள்ள மக்களின் வாழ் வுத் துறைகளினின்றும், அம்மக்களின் சமய நிலையை அளந்து கூறப் பல சான்றுகளில்லை ; சிற்சில குறிப்புக்களே இருக்கின்றன. அவைகளில் இரண்டொன்றை உங்கள் முன் கிளத்துகிறேன்.
கடவுள்
தொல்காப்பியனார் நூல் யாக்கப் புகுந்தபோது தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துக் கூறினாரில்லை... அந் நாளில் அவ்வழக்கம் இல்லை போலும். நூலினுள்ளே மட்டும் நிலக் கடவுளர் பெயர்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. நால்வகை நிலங்கட்கெனக் கடவுள்கள் குறிக்கப்பட்டிருப்பது போல, அந்நிலங்கட்கென மரம் பூ புள் விலங்கு முதலியனவுங் குறிக்கப்பட்டிருக்கின்றன. இப் பாகுபாடுகள் நிலங் களின் இயற்கைக் கேற்றவண்ணம் அமைந்திருப்பன. அவ்வமைப்பைத் தொல்காப்பியனார் தெருட்டி யிருக்கிறார். கடவுள் பெயர்களும் நிலங்களின் இயல்புக்கேற்றவாறு அமைந்திருத்தல் வேண்டும்.
இயற்கையழகே கடவுள்
பழந்தமிழர்கள் இயற்கை அழகையே உயர்ந்த பொருளாக அதாவது கடவுளாகக் கொண்டு வாழ்ந்தார்கள். அவர்கள் மலைமீது வாழ்ந்தபோது அவர்கள் உள்ளத்தைக் காலையிலும் மாலையிலும் ஞாயிற்றின் செம்மை யும், வானத்திற் படருஞ் செம்மையும், பிற செம்மையுங் கவர்ந்தன. அச்செவ்விய இயற்கையழகை அவர்கள் சேய்