பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

தமிழ் நூல்களில் பௌத்தம்



பிறந்தமுற் பிறப்பை யெய்தப் பெறுதலின்
அறிந்தோ ருண்டோ வென்று நக் கிடுதலும்
"

மணிமேகலை அம்மையார் நகைத்தல் கண்ட உலகாயதன்,

"தெய்வ மயக்கினுங் கனாவுறு திறத்தினு
மைய லுறுவார் மனம்வே றாம்வகை
ஐய மன்றி யில்லை யென்றலும்
"

மீண்டும் அம்மையார் அவனை நோக்கி,

"நின்றந்தை தாயரை யனுமானத் தாலல
திந்த ஞாலத் தெவ்வகை யறிவாய்
மெய்யுணர் வின்றி மெய்ப் பொருளுணர் வரிய
ஐய மல்ல திதுசொல் லப்பெறாய்
"

என்று கூறி அவனுக்கு அறிவு கொளுத்தினர்

பௌத்தம், உலகாயதம் என்று சிலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அவர் பௌத்த நூல் ஆராய்ச்சி யில்லாதார். நல்வினை தீவினை, இம்மை மறுமை, உயரிய நிர்வாண நிலை முதலியன பௌத்தத்திலுண்டு. இவ்வுண்மை மணிமேகலையை ஒரு முறை வாசிப்போர்க்கும் இனிது புலனாகும். மெய்யுணர்வு விளங்கியதும் பழம்பிறப்புணர்தல் என்பது பௌத்தத்தின் சிறந்த கொள்கைகளுள் ஒன்று.
மணிமேகலைக் கால நிலை
மணிமேகலைக் காலத்தில் தமிழ்நாடு அறஞ்செறிந்த செழிய நாடாக அன்றோ பொலிந்தது? அந்நாட்டை மீண்டுங் காண்பேமா? காண முயலல் வேண்டும். மணிமேகலை நமக்கு வழங்கும் அமுதச் செம்பொருள்களைப் பருகாத மக்கள் மக்களா என்று வினவுகிறேன்.மணிமேகலையில் எங்கணும் அறம்; எங்கணும் அன்பு; எங்கணும் அருள்.மணிமேகலையில் சாதி கடிதல், பலி யொழித்தல், உயிர்க்கொலை நிறுத்தம் முதலியன யாண்டும் யாண்டும் மிளிர்கின்றன. மணிமேகலையில் ஒப்புர