பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தமிழ் நூல் அறிமுகம் r

கொண்டே அவருக்குத் தேய்புரிப் பழங் கயிற்றினார்' என்று

பெயர் வைத்துவிட்டார்கள்! 216-ஆவது பாட்டில்,

கதிை லாளன் கவலை கவற்ற

ஒருமுலை அறுத்த திருமா உண்ணிக் கேட்டார் அனையர்.

என்ற பகுதி வருகிறது. அதைப் பாடியவர் மதுரை - மருதன் இளநாகனார் . இது சிலப்பதிகாரத்தில் வரும். கண்ணகியைக் குறிப்பிடுவதுபோல இருக்கிறது. ஆனால் சிலப்பதிகாரத்தின் காலம் வேறு நற்றிணையின் காலம், வேறு. -

பாடல்களில் இடையிடையே மணி மணியான கருத்துக்கள் பல வருகின்றன. -

பெரிய பெரிய காரியங்களைச் செய்வோம் என்று உறுதிமொழி கூறுவதும், வேகமான ஊர்திகளில் ஏறிப் போவதும் செல்வத்துக்கு அறிகுறி என்று பொதுவாக உலகத்தார் நினைக்கிறார்கள், அவை முன்னை வினைப் பயனால் வருபவை. அவை அல்ல செல்வம்; தம்மைச் சேர்ந்தவர்களுக்கு வரும் துன்பத்தைக் கண்டு அஞ்சி அதை நீக்க முற்படும் மெல்லிய பண்புதான் செல்வம்" என்று ஒரு பாட்டில் வருகிறது.

"நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

செல்வம் அன்று; தன் செய்வினைப் பயனே சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் - மென்கட் செல்வம் என் பதுவே.' (210). "பழகிய பகையும் பிரிவுஇன்னாதே' என்பது ஒர் அரிய அடி. - -

நமக்கு வேண்டாதவர் நம் எதிர் வீட்டில் இருக் கிறார். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து நாம்