பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. கலித்தொகை 121

பார்க்காமல் இல்லை. இந்தக் காட்டு வழியில் பார்த்தோம். அந்த அழகுடைய மைந்தனோடு இந்தக் கடுமையான பாலையில் செல்லத் துணிந்த அந்தப் பெண்ணுக்கு நீங்கள் தாயார்போல இருக்கிறது. நீங்கள் ஏன் அவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?

'சந்தன மரம் மலையிலே பிறந்தாலும் அதை வெட் டிக்கொண்டு போய்ப் பயன்படுத்துபவர்களுக்கு அல்லாமல் அந்த மலைக்கு எவ்வாறு உதவும்? யோசித்துப் பார்த்தால் உம்முடைய மகளும் உமக்கு அப்படி இருப்பவள் தான்.

'வெள்ளையான முத்து, நீரிலே பிறந்தாலும் அதை அணிபவருக்குத்தான் அது பயன்படுமேயல்லாமல் அந்த நீருக்கு அதனால் என்ன பயன்? உங்கள் மகளும் உங்களுக்கு அவ்வாறு இருப்பவள் தானே? •

'ஏழிசை யாழிலே பிறக்கிறது; இசைப்பவர்களுக்குத் தான் இசை பயன் தருமேயன்றி யாழுக்கு என்ன செய்யும்? உங்கள் மகளும் அத்தகைய்வள் தானே?

"இவ்வாறு நினைக்கும்படி, கற்புடையவளாக உங்களை விட்டுப் போனவளுக்காக வருத்தப்படாதீர்கள்; எல்லாரினும் தனக்குச் சிறந்தவனாகிய காதலனைப் பின் பற்றி அவள் போனாள். அறத்தினின்றும் மாறுபடாத வழியும் அதுதான்.”

செவிலித்தாய் கேட்பதும், முக்கோற் பகவர் விடை கூறுவதுமாக உரையாடற் பாணியில் இந்தப் பாட்டு அமைந்திருக்கிறது. . . . . . . . . .

“...... அக்தணிர்,

வெவ்விடைச் செலல்மாலை ஒழுக்கத்தீர், இவ்விடை