பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றினை - | 85

கண்ணினால் பார்க்க முடியாதது; கருத்தினால் மட்டும் அறியத் தக்கது. அத்தகைய நுட்பமான ஒன்றை எப்படிச் சொல்லுவது? - -

கவிஞர்கள் நுட்பமானதையும் நாம் உணரும்படி செய்துவிடுவார்கள். - -

"என் காதலர் மிக உயர்ந்தவர்; அவர் என்னிடத்தில் வைத்துள்ள உறவாகிய காதல் உயர்ந்தது; உயர்ந்தோ ருடைய கேண்மை உயர்ந்ததாகத்தானே இருக்கும்?”

புரைய மன்ற புரையோர் கேண்மை."

அதன் உயர்வைக் காதலி சொல்ல வருகிறாள். புள்ளிக்கு அளவு இல்லை ஆனாலும் அதனைக் காட்டு வதற்குக் கணித நூலார் இரண்டு கோடுகளை ஒன்றை ஒன்று வெட்டும்படி போட்டு அவை வெட்டும் இடத்தில் உள்ளது புள்ளி என்று காட்டுவார்கள். நுட்பமான தைத் திட்பமானவற்றின் சார்பு கொண்டு விளக்குவது ஒர் உத்தி. ஆலமரத்தைக் காட்டி அருந்ததி நட்சத் திரத்தைக் காட்டுவதில்லையா? -

முதற்பாட்டைப் பாடிய கபிலர் என்னும் புலவர் அப்படி ஓர் உத்தியை ஆள்கிறார். உயர்ந்தவையாகவும் இனியவையாகவும் உள்ள பொருள்களை உவமையாகக் காட்டிக் காதலை விளக்க வருகிறார். -

உயர்ந்த சாதி வண்டுகள் தாமரை மலரிலே புகுந்து அதில் உள்ள தண்ணிய பூந்தாதை ஊதி முரல்கின்றன. அதில் உள்ள தேனை உண்ணுகின்றன. அங்கிருந்து மேலே மேலே பறக்கின்றன. மனிதனுடைய காற் புழுதியும் மூச்சுக் காற்றும் படாத மலையின் மேலே செல்லுகின்றின. அங்கே மலை முகட்டில் சந்தன மரம் வளர்கிறது. அத்ன் உச்சிக்குச் சென்று அடைகட்டித் தேனை வைக்கின்றன. தாமரைத்தேன், புழுதிபடாத

த-6 - : . . . . . . . .