பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழியைப் பயிற்றும் நோக்கங்கள் # 9

கொண்டுவர முடிகின்றது, ஒரு மொழியிலுள்ள சொற்கள் யாவும் இப்படிப்பட்டவையே. மொழிவளர்ச்சியே நாகரிக வளர்ச்சியாகும். தாய்மொழியின் வாயிலாக எண்ண வளர்ச்சி ஏற்படுவது இயல்பாதலால், அது முதலில்

கற்பிக்கப்பெறுதல் வேண்டும்.

மனத்திலுள்ள கருத்தைத் தெளிவாகக் காரண காரியமுறையில் வெளிப்படுத்துவதற்குச் சிறந்த மனப்பயிற்சி வேண்டற்பாலது. இதைத் தாய்மொழி வாயிலாகத்தான் எளிதில் பெற இயலும். தாய்மொழிப் படிப்பே கல்விக்கு அடிப்படையாக அமைந்து நிலைத்ததும் ஆழமானதுமான உயர் பண்புகளே ஒருவரிடம் ஏற்படுத்துகின்றது. ஒரு திட்டப்படி வேலே செய்தல், மனத்திலுள்ள கருத்துக்களைக் கோவையாக வெளியிடல், கலேத்துறைகளில் இறங்கி உழைத்தல் முதலிய நற்பழக்கங்கள் யாவும் தாய்மொழிப் படிப்பால்தான் கைவரப்பெறும் என்று மொழிமுறை அறிந்த மூதறிஞர்கள் மொழிகின்றனர். எனவே, தாய்மொழிப்படிப்பு மிகவும் இன்றியமையாதது என்பது பெறப்படுகின்றது.

தாய்மொழி இலக்கியத்தைப் படிக்கும்பொழுதுதான் அந்நாட்டு வரலாற்றைப்பற்றித் தெளிவாக அறியமுடிகின்றது. இலக்கியம் வாழ்க்கையின் கண்ணுடி’ என்றும், வாழ்க்கையே மொழியில் இலக்கியமாக அமைகின்றது என்றும் மேனுட்டுத் திறனுய்வாளர்கள் கூறுவர். எடுத்துக்காட்டாக புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களால்தான் பண்டைத் தமிழகத்தின் வரலாறு, பண்டைத் தமிழர்களின் வாழ்க்கைமுறை, அவர்களின் ஆட்சிமுறை, சமய நிலைகள், கலேகள் முதலியவற்றை அறிய முடிகின்றது. வரலாற்றுப் படிப்பு. கல்வெட்டுக்கள், செப்புப் பட்டயங்கள், பழங் கட்டிடங்கள், கோயில்கள், நாணயங்கள், அயல் நாட்டினர் எழுதிவைத்த குறிப்புக்கள் முதலியவற்ருல் அறியமுடியாத 'உண்மைகளையெல்லாம் இலக்கியங்களால் அறிய முடியும். கல்லிலும் செம்பிலும் எழுதிவைக்க முடியாத இதய