பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474. தமிழ் பயிற்றும் முறை

முறைவழிப் படுஉ மென்பது திறவோர் காட்சியிற் றெளித்தனம் ; ஆகலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே ; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.”*

பண்டைத் தமிழ்ச் சான்றேர் ஒருவரின் பரந்த உள்ளத்தைக் காட்டும் பாட்டு இது. பாட்டின் கருத்துக்களே உணர்தல் கடினம். கற்று உணர்ந்து அடங்கிய சான்றேர்களும் மேற்கொள்ளுவதற்கு அரியனவாகவுள்ள சில கருத்துக்கள் இப்பாடலில் மிளிர்கின்றன. இப்பாடலைத் தனிப்பட்ட முறையை மேற்கொண்டுதான் கற்பித்தல் வேண்டும்.

இத்தகைய பாடல்கட்கு ஏற்கெனவே கூறியவாறு விளக்கமான் முகவுரை ஒன்றிருத்தல் வேண்டும். அவ்வித விளக்கம் பெற்ருல்தான் ஆசிரியர் பாடலே இசையுடன் படிக்கும்பொழுது மாணுக்கர்கள் அதன் கருத்தை ஒரளவு உளங் கொள்ள முடியும். கருத்தாலும் மொழி நடையாலும் கடினமாகவுள்ள இப்பாட்டிற்கு இதை விளக்கந் தரும் முகவுரையாகக் கொள்ளலாம் : "பாட8லப் பாடிய கவிஞர் வாழ்விலும் தாழ்விலும் தளராத மனத்திட்பமுடையவர்; இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரியாகக் காணும் மன அமைதியுடையவர். நன்மை செய்ததற்காக ஒருவரைப் பாராட்டவும் செய்யார்; தீமை செய்தார் என ஒருவரை இகழவும் செய்யார். இவ்வாறே பெரியோரென்று ஒருவரைப் போற்றிப் புகழவும் மாட்டார்; சிறியோர் என்று ஒருவரைப் புறக்கணிக்கவும் மாட்டார். ஊழ்வலியில் பெருநம்பிக்கை கொண்டவர். மண்ணிடைப் பிறந்த உயிர்கள் யாவும் தாம் தாம் செய்த வினைக்கேற்றவாறு இன்பமும் துன்பமும், உயர்வும் தாழ்வும், செல்வமும் வறுமையும் எய்தும்

  • புறம். 192 (கணியன் பூங்குன்றனர்). உயர்நிலைப் படிவ மாளுக்கர்கட்குக் கற்பிக்கப்பெற்று வந்தாலும், கல்லூரி மாளுக்கர்கட்குத்தான் ஏற்றது.
  • ஆரபி, தோடி-ஆகிய இரண்டினுள் ஏதாவதோர் இராகம் பொருந்தும்.