பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 தமிழ் பயிற்றும் முறை

விடுகின்றது. வடநாட்டுச் சமயங்களாகிய பெளத்தம், சமணம், ஆசீவகம், வைதிகம் ஆகிய சமயங்கள் தமிழ் நாட்டில் வந்து ஒவ்வொன் ருகச் செல்வாக்குப் பெற்றபொழு. தெல்லாம் அச்சமயங்களே உணர்த்தக் கருவியாக இருந்த வடநாட்டுப் பாகத மொழிகளுக்கும் சமஸ்கிருத மொழிக்கும் தென் குட்டில் செல்வாக்கு அதிகமாக இருந்தது. அப். பொழுது அம் மொழிகளிலிருந்து சொற்கள் தமிழிலும் இதர தென்னுட்டு மொழிகளிலும் ஏராளமாக வந்தேறின. தமிழில் வடமொழிச் சொற்கள் வந்து புகுந்த வரலாற்றை டாக்டர் கால்டுவெல் அவர்கள் மூன்று பகுதியாகப் பிரித்துக்கொண்டு விளக்குகின்ருர். எடுத்துக்காட்டாக, தமிழில் ஆண்டு. களின் பெயர்கள், திங்களின் பெயர்கள், திதிகளின் பெயர்கள் யாவும் அங்ங்னம் வந்தவை. டாக்டர் கால்டுவெல் அவர்கள் காட்டியுள்ள எடுத்துக் காட்டுக்களை ஈண்டு குறிப்பிடலாம். தமிழ் மாதங்களின் பாகுபாடு இன்று GrußÖGuusd Siriuri (Solar sideria) இருப்பினும் முன்குட்களில் திங்களின் சார்பாகவே இருந்தது. அவற்றின் பெயர்கள் பெரும்பாலும் திங்கள் தங்கும் விண்மீன்களின் பெயர்களேயே கொண்டன. இவ்விடங்களிலும் நேரிடையான விண்மீன்களின் பெயர்களில்கூட சிதைவு மிகுதி காணப்படுகின்றது. விண்மீன் பெயராகிய வடமொழி "பூர்வ-ஆஷாடம் தமிழில் பூராடம் ஆயிற்று. அது திங்களின் பெயரில் புகும்பொழுது ஆஷாடம் என்ற வடசொல் “ஆடம் என்ருகி அதன்பின் ஆடி என்ற உருவை யடைந்தது. வடமொழி விண்மீனின் பெயராகிய அஸ்வினி' என்பதே தமிழ்த் திங்கட் பெயர் ஐப்பசி’ ஆயிற்று. இன்னும் தொலைப்பட்ட சிதைவு புாட்டாசி’ என்பது. இதன் வடமொழி முதற்சொல் பூர்வ-பாத்ர-பத’ என்பது. இவ்வட சொல்லே விண்மீனின் பெயராக வரும் பொழுது பூரட்டாதி என்ருகின்றது; அது பின் திங்கட் பெயராக வரும்பொழுது புரட்டாசி என்று வடிவெடுக்கின்றது. இவ் விண்மீன் பெயர்கள் திங்கட் பெயர்கள்

      • Caldwell: Comparative Grammar of Dravidian Languages pp. 83-85.