பக்கம்:தமிழ் மணம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

3. குழப்புதல் வேண்டா ஆங்கிலம் தமிழ்நாட்டில் பரவியுள்ளது. பிற மொழியை அறிந்தவரைவிட ஆங்கிலமறிந்தார் தமிழரிடையே பலர் உள்ளார்கள் என்பதில் ஐயத்திற் கிடமில்லை. எழுதப் படிக்க அறிந்தவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ள நம் நாட்டில். ஆங்கிலம் அறிந்தாருடைய எண்ணிக்கை அந்த வகையில் பார்க்கும்போது மிகக் குறைவேயாம்! ஆனால். இங்கு நாம் ஆராயவேண்டுவது உயர்நிலை வகுப்பிற்கும். கல்லூரிக்கும் சென்று கற்கும் மாணவர்களது சூழ்நிலையேயாம். இங்கு ஆங்கிலம் பழகியதொரு மொழியாக விளங்கவே காண் கிறோம். வேறு எந்த மொழிக்கும் தமிழ்நாட்டில் தமிழுக்கு அடுத்தபடியாக இந்தச் சிறப்பும பழககமும் இல்லை எனலாம். அனைத்துலக மொழியாக விளங்கும் இதனைச் சாம்ராஜ் யத் திமிரின் கடுங் குரலாக இனி நாம் கேட்கவேண்டுவ தில்லை. உலக முன்னேற்றச் சூழலில் ஒலிக்கும் விஞ்ஞானத் தின் உண்மைக் குரலாகவே அஃது இன்று எல்லோர்க்கும் இனிக்கின்றது. உலகத்தோடு ஒத்து வாழ முயலும் நாம். இயற்கையின் இயைபொடு நம் வரலாற்றுப் போக்கில் நமக் குக் கிடைத்து, நம்மிடம் பரவிய அந்தச் செல்வத்தினை இழக்க வேண்டுமோ? நம் வழிவழி வரும் தலைமுறைகளுக்கும் உதவும் செல்வமாக அதனை வகுப்பதே சிறந்ததாம். எனவே. நம் பிரதமர் ஆங்கிலத்தை நம் மாணவர்கள் கற்கவேண்டும் என்று கூறுவது தமிழன் நெஞ்சில் எழும் இனிய பாடலே என்று கூறலாம். ஆங்கிலம் அறிந்த மாணவர்கள், தம் தாய்மொழி வழியே எதனையும் கற்கப் புகும்போது அவர்களுக்கு என் றென்றும் எப்போதும் உதவ ஆங்கில நூல்களும்,ஆராய்ச்சி இதழ்களும் கோடிக்கணக்கில் காத்துக்கொண்டிருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/19&oldid=1480334" இலிருந்து மீள்விக்கப்பட்டது