பக்கம்:தமிழ் மணம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குழப்புதல் வேண்டா 21 விரும்பிப் பேச, ஆங்கில நூல்களை விரும்பிப் படிக்க எளிதில் கேர்ச்சி அடைந்துவிடுவார்கள். இந்த விருப்பம் கைவந்த பின், இவ்வளவு நேரம் பின்னைய ஆண்டுகளில் செலவழிக்க வேண்டுவதில்லை; நேரங் குறையச் செலவும் குறையும். முதல் வகுப்பில் பட்டம் பெற்றோரை ஆசிரியராக அமர்த்துவ தால் நேரிடும் செலவு இந்த வகையில் ஈடாகிவிடும். முதலில் நல்ல வகையில் கற்பிக்காமல், பின்னெல்லாம் முயல்வது வீணேயாம். மேலும் மேலும் சுமையை மாணவர் தலையில் சுமத்துவதாகவே அத்தகைய முயற்சிகள் மாணவர் உள்ளத் தைக் கலக்குகின்றன. முதல் இருந்தே கற்பிக்கும் முறை மாறுமானால் ஆங்கிலத்தின் தரம் உயர்வதில் தடை ஒன்று மில்லை இந்தத் திட்டத்தில் ஆங்கிலம் துணையாக நிற்குமே யன்றி முதலாக அமைந்துவிட முடியாது. முன்னெல்லாம் முதலாக அமைந்த ஆங்கிலத்தின் இடத்தைத் தமிழ்நாட்டில் தமிழே பெறமுடியும். ஆங்கிலமே பெறமுடியாதென்றால். இந்தி அந்த இடத்தைப் பள்ளிக்கூடங்களில் பெறமுடியும் என்பது வீண் கனவேயாம். தமிழில் உயர்நிலை வகுப்புக் களில், மாணவர்கள். எல்லாப் பாடங்களையும் படித்துவிட்டுக் கல்லூரியில் வந்ததும் வேறு மொழியில் படிக்கத் தொடங்கு வது அருமையினும் அருமையாகிறது. பாதித் தமிழிலும் பாதி ஆங்கிலத்திலும் பேசியே இன்று கல்லூரிகளில் பாடம் நடைபெறவேண்டியிருக்கிறது. அங்கும் தமிழிலே நடந்தால் மாணவர்கள் எளிதில் கருத்தினைப் புரிந்துகொள்ள முடியும். தாது; ஆனால்,இன்று கருத்தினை அறிந்தால் மட்டும் போத அதனை ஆங்கிலத்தில் பரீட்சையில் எழுதி வெளியிடும் ஆற்ற லும் மாணவர்கள் பெறவேண்டும். எனவே, இந்தப் பரீட்சை அவர்கள் அறிவை அளக்காமல் ஆங்கிலப் பயிற்சியையே அளக்கிறது. இதன் பயனாக, மாணவர்கள் கருத்தினை அறி வதில் நாட்டம் இழந்து. அக் கருத்தை எளிதில் உருப்போட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/21&oldid=1480336" இலிருந்து மீள்விக்கப்பட்டது