________________
34 தமிழ் மணம் தென்னிந்திய இலக்கியச் சங்கம் ஒன்று தோன்றுதல் வேண் டும். அவ்வம் மொழியில் ஆஸ்தான வித்வான்கள். அவ்வம் மொழியில் வரும் நூல்களுக்குப் பரிசில்கள் என்ற திட்டங்கள் சென்னை நாட்டில் நிலைத்து நின்றுவிட்டன. ஆதலின், இந்த அடிப்படையில் இலக்கியச் சங்கம் தோன்றுவது எளிது. தென்முனை வடமுனைக்குத் தெரிவது அருமை; நமக்குத் தெரிவது எளிது. உலகில் வடமொழி நூல்கள் பேரும் புகழு மாக விளங்குவது நமது பெருமையே ஆகும். ஆனால், தென் மொழியில் உள்ள சிறந்த நூல்களும் உலகில் பரவி அறிவுப் பஞ்சத்தினைப் போக்கவேண்டாவா? இதில் தென்னிந்திய மொழியினருக்கும் நன்மை உண்டு. வடமுனை பிற நாடுகளோடு எளிதில் தொடர்பு பெறுகிறது. தென்னாட்டு மொழிகள் தமக்குள் ஒன்றோடொன்றும் தொடர்பு கொள்வதில்லை. நாம் கதவுகளைத் திறந்துகொண்டு வெளியே வரவேண்டும். வெளியிலிருந்து வீசும் தூய காற் றும் கதிரவனது நல்லொளியும் உள்ளே புகுந்து தூய்மை யாக்கும்படி பலகணிகளைத் திறக்கவேண்டும். ஒருவர் நூலை ஒருவர் கற்பதோடு. பிறநாட்டு நூல்களையும் அறிய வாய்ப்பு வேண்டும். அவற்றில் தலைசிறந்தவற்றை நாம் நம் மொழியில் அமைத்துக்கொள்ளுதலும் வேண்டும். கலைக் களஞ்சியங்களுக்குப் பொதுவான படம் முதலியவற்றை எல்லா மொழியினரும் ஒன்றாகத் திரட்டலாம் அன்றோ? கலைச் சொற்கள் மொழி வளர்ச்சித் திட்டங்கள் போன்ற முயற்சி களில் அனைவரும் ஒத்துழைப்பதால். எடுத்த வேலையை எளிதில் முடிக்கலாம். வரலாற்று ஒற்றுமை, சூழ்நிலை ஒற் றுமை முதலியனவும் துணை செய்யும். சர்தார் பணிக்கர் இந்த முயற்சியை வற்புறுத்திப் பேசி யதையும் இதற்கென முன்னேற்பாட்டுக் குழு ஒன்று தோன்றியுள்ளதையும் செய்தித்தாளில் பலரும் கண்டிருப் பர். இந்த முயற்சி வெற்றியோடு தென்னாட்டு மொழிகளினை