பக்கம்:தமிழ் மணம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

7. தமிழுக்கு உழைத்த தாத்தா தமிழ்த் தாத்தாவுக்கு நூற்றாண்டு விழாக் கொண் டாடினோம். பொதுவாகப் பெரியோரின் இறந்தநாளைக் கொண்டாடுவதே வழக்கம். ஆனால், சாவாப் பெருவாழ்வு வாழ்ந்த பெரியோர்கள்- புதிய யுகத்தை, ஊழியைத் தொடங்கிய அறிஞர்கள் - உடலை மட்டும் எமன் கையில் விட்டு ஒழித்து அவனை ஏமாற்றி என்றென்றும் வாழும் புகழாளர்கள் - இவர்கள் இறந்தார்கள் என்று எவ்வாறு கூறுவது? இவர்கள். இறப்பின் எல்லையையும் இறந்து வாழவே பிறந்தார்கள். இவர்கள் பிறந்த விழாவே பெரும் பொருள் உடையது. கிருஷ்ண ஜயந்தி, இராம ஜயந்தி சங்கர ஜயந்தி, காந்தி ஜயந்தி என்று கொண்டாடுவது போலச் சாமிநாத ஜயந்தியும் இனிக் கொண்டாடுவோம். ஆம்: டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்தாம் தமிழ்த் தாத்தா- தமிழ்க் குழந்தை - அதுவே வியப்பு. அவர் பிறந்து நூறாண்டு -சகாப்தம் - முடிந்தது. இந்தியாவும் தமிழ்நாடும் புத்துயிரும் புத்துடலும் பெற் றெழுந்த நூற்றாண்டு இது. சிப்பாய்க் கலகம் என்ற இந் திய உரிமைப் போருக்கு வேண்டிய சூழல் உருவாகும்போது இவரும் கருவில் உருவானார். இன்று நாம் உரிமையும் பெற்று வாழ்கின்றோம். நம் உரிமை வேட்கை பழம்பெருமை வேட்கையாகவும் விளங்கியதன்றோ? அந்தப் பழம் பெரு மையே நமக்கு உரிமை கேட்கும் உறுதி தந்தது; உரிமை கேட்கும் வாயும் தந்தது. நம் பழைய வரலாறு நமக்கோர் ஊக்கம் தந்தது. மேல்நாட்டாரும் வியந்து போற்றும் வர லாறு அன்றோ அது? அந்த வரலாறு நம்முடைய மொழி களின் வழியே வெளியாயிற்று. நம் உரிமைப் போராட்டம் மொழிப் போராட்டமாய், வரலாற்றுப் போராட்டமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/36&oldid=1480445" இலிருந்து மீள்விக்கப்பட்டது