பக்கம்:தமிழ் மணம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 தமிழ் மணம் வருகிற பதிப்புக்களை நம்ப முடியுமா? தாத்தா இவ்வாறு பழகியதால் பிறர் இத்தகைய பழக்கத்தினை மேற்கொள் ளாமையைக் கண்ணெரியக் கருத்தெரியக் கண்டமையால் தாமே சிறந்த தமிழ்நூல்களைப் பதிப்பிக்கவேண்டும் என்று எண்ணினார். இதனைத் தவறாகக் கருத முடியுமா? தமிழொடு துடித்தது தமிழ்த் தாத்தாவின் உள்ளம். எல்லாவகையான நூல்களையும் அவர் பதிப்பித்தமையும் கண்டோம். பதிப்பாசிரியர் மட்டுமா அவர்? உரையாசிரிய ரும் அவரே. மணிமேகலையின் குறிப்புரை, குறுந்தொகை யின் விரிவுரை இவற்றை யாரே மறக்கக்கூடும்! தமிழ் எழு தும் முறையும் தமிழ்நாட்டு முறையோடு சேர்ந்து அவரிடம் மாறி வளர்ந்து ஓங்கியது. தமிழே வடிவாக விளங்கியவர் தமிழொடு வளராரா? புறநானூற்றின் முன்னுரையையும், குறுந்தொகையுரையையும் கண்டால், 'என்ன புரட்சி!' என்றே தோன்றும். முதுமையில் எழுந்த இளைய மனப் புரட்சி, அன்புப் புரட்சி, தமிழ்ப் புரட்சி இது. சிறுவர்க்கான செந்தமிழ் என்ற முறையில், 'கண்டதும் கேட்டதும் முத லான நூல்கள் எழுதினார். இந்த மாறுதல், இளைஞரோடு பழகி இளைஞர் உள்ளத்தோடு இவர் ஒன்றாகிவிட்டதால் எழுந்ததுபோலும்! கும்பகோணம் கல்லூரியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ்த் தலைமை நடாத்தும் உரிமை பெற்றார்; பதிப்பாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியர் என இவ்வாறு வாழவரும்போது புதிய தமிழுலகத்திற்கேற்ற நூலாசிரியராகவும் ஓங்கி வளர்ந்தார்: வாழ்க்கை வரலாறு என்ற நூல்வகைக்கு என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங் கும் வகையிலும் எழுதினார். நன்றியுள்ளமே வடிவானவர் அன்றோ இவர்! தியாகராய செட்டியார் கும்பகோணம் கல் லூரித் தமிழ்த் தலைமையை இவருக்கு அளித்தார். அவர் வரலாற்றைத் தாத்தா எழுதினார். தம் வீட்டினையே தியாக ராயர் பெயரால் அழைக்கலாயினார்; அம்மட்டுமா? தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/42&oldid=1480439" இலிருந்து மீள்விக்கப்பட்டது