உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் மணம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்திய மொழிகளில் தமிழ் மணம் 55 பகுதிகளை அங்கங்கே மொழிபெயர்த்துத் தம் பிரம்மசூத்திரப் பேருரையில் இராமானுசர் எழுதுகிறார். இராமாநுசரின் வைணவம் புதிய ஊழியை இந்தியா ளில் துவங்கியது எனலாம். ஆழ்வார்களை ஒட்டி, அன்பு நெறியையும். கடவுளின் அளவற்ற அருள்நெறியையும். தொண்டர்குலமென மக்களை ஆண்டவன் புதல்வராகக் கொண்டு சமூகத் தொண்டு செய்து சாதிச் சழக்கில் விழாத பெருநெறியையும் அவர் வற்புறுத்தினார். அவர்தம் கொள் கையே இராமாநந்தர். கபீர், துக்காராம், இராமதாசர். நாநக், சைதந்யர் என்ற வடநாட்டுப் பெரியோர்கள்வழியே பெரும்புரட்சியை விளைவித்தது. எனவே, தமிழ்ப் பண்பாட் டின் பெருமையையே இங்குக் காண்கிறோம். பின்வந்த மணவாள மாமுனிகளும் இந்தப் பாதையில் இந்தியா முழுவதிலும் ஆழ்வார் பாடல்களை அவரவர்கள் தத்தம் மொழியெழுத்தில் எழுதிப் பாராயணம் பண்ணும் முறையைப் பரப்பினார். பதிரிகாசிரமத்திலும், பம்பாயிலும். தெலுங்கு நாட்டிலும் இந்தக் காட்சியை இன்றும் காணலாம். உண்மையில், மணிப்பிரவாளத் தமிழில் உள்ள நூல்கள், முதலில் தெலுங்கிலேயே பதிப்பிக்கப்பெற்றுவந்தன. ஆழ்வார்கள் பாடல்களும், நாயன்மார்கள் பாடல்களும் ஒருதன்மையனவே. பக்தி என்ற கன்னி. தாமிரபர்ணிக் கரையிலும், காவிரிக்கரையிலும் பிறந்து, வடநாட்டில் உலவி, குஜராத்தில் முதுமை அடைந்தாள்' என்று பவிஷ்யத் புரா ணம் கூறும் கதை, பக்தி இயக்கத்தின் வரலாற்றுண்மையைக் கற்பனைக் கண்கொண்டு காணும் காட்சியே ஆம். நம்மாழ்வார் பாடலின் கருத்துக்களை வேதாந்த தேசிகர் வடமொழியில் பாடி அருளினார். ஆண்டாளின் வரலாற்றை விசயநகரப் பேரரசராயிருந்த கிருட்டின தேவராயர் ஆமுக்த மால்யதா என்ற காப்பியமாகப் பாடினார். ஆமுக்தமால்யதா என்பது சூடிக் கொடுத்த நாய்ச்சியார் என்றே பொருள்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/55&oldid=1480458" இலிருந்து மீள்விக்கப்பட்டது