பக்கம்:தமிழ் மணம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்திய மொழிகளில் தமிழ் மணம் 57 சைன மதத்தில் உலகினை வெறுப்பதே முடிவு என்ற கருத்தில், சைன அரசியல் அமைய முடியுமா என்ற ஐயம் எழுவது இயல்பே. அகிம்சையை வற்புறுத்திய காந்தியடிகள் அரசியலை அறவியலாக்கியபின் இந்த ஐயம் எழுவதற் கில்லை. ஆனால், சோழப்பேரரசு புத்துயிர் பெற்று மேலோங் கியபோது சோழக் குடியில் தோன்றிய திருத்தக்கதேவர் சைனக் கொள்கையைத் தவறாது பின்பற்றும் சீவகன் பேரரச னாக வாழ்வதனை விளக்கிச் சீவக சிந்தாமணி என்ற காப்பியத் தைப் பாடித் தந்தருளினார். இந்தக் காப்பியம் முன்னெல் லாம் வடமொழி நூல்களான க்ஷத்திர சூடாமணி, சத்ய சிந்தாமணி, சீவசம்பு முதலியவற்றிலிருந்தவற்றை யொற்றி அமைக்கப்பெற்றது என்று பேசிவந்தனர். க்ஷத்திர சூடாமணி பாடிய வாதீபசிம்மர்.12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டாம் இராசராசனின் அவைக்களப் புலவ ராதலின், அவ: நூல் திருத்தக்கதேவர் காப்பியத்தைப் பின்பற்றியது என்பது இப்போது தெளிவாகிறது. அடி சைனர், பௌத்தர் முதலானோர் தமிழறிந்து தமிழை வளர்த்தது ஒருபுறமிருக்கத் தண்டி ஆசிரியர் போன்றவர் களும் தமிழ் அறிந்திருந்தனர் என்பது இப்போது புல னாகிறது. தண்டி ஆசிரியர் இராசசிம்மப் பல்லவர் அவைப் புலவர் என்பது விளங்குகிறது. அவர் எழுதிய நூல் ஒன்றில், தமிழில் சத்ருகர் வரலாற்றை எழுதிய சிற்பி ஒருவர் தம் நண்பர் என்று கூறுகிறார். ஆதலின், ஒருவேளை தண்டியும் தமிழ் அறிந்திருக்கலாம்: தம்முடைய அரிய நூலான காவியா தரிசத்தில் செய்யுட்களைத் தொடர்நிலைச் செய்யுள்,தொகை நிலைச் செய்யுள் (அகநானூறு ) முதலியவை என்றும், தொடர் நிலைச் செய்யுளைச் சொற்றொடர்நிலைச் செய்யுள் (அந்தாதி) என்றும், பொருள் தொடர்நிலைச் செய்யுள் (காப்பியம்) என்றும் பிரித்து வழங்கியது தமிழ்நூல்களில் உள்ள அந்தாதி. எட்டுத்தொகை முதலிய நூற்களை அறிந்ததாலே 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/57&oldid=1480460" இலிருந்து மீள்விக்கப்பட்டது