பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

104.

"சாங்கம தாகவே சந்தொடு சந்தனம்

தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில் பாங்கு படப்பணி நீரால் குழைத்துவைத் தாங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே' என்ற பாட்டாலும் தெளியலாம். கர்ப்பூரம் ஈண்டுப் பச்சைக் கர்ப்பூரமாகும்.' -

மந்திரம் உச்சரிக்கும் முறையினையும் உணர்ந்து உச்சரிக்க வேண்டும். இதனை ஆசாரியர் வாயிலாக முன்னரே நன்கு உணர்ந்திருத்தல் வேண்டும். மந்திரத்தைப் பிறர் கேட்கும் வண்ணம் உச்சரிக்காமல், மனத்திற்குள்ளேயே உச்சரித்துக் கொள்ளவேண்டும். இம்முறைகளைப்பற்றிய குறிப்பை அசபை என்ற பகுதியில் திருமூலர் சொல்லும்போது,

'பொன்னை மந்திரம் புகலவும் ஒண்ணுது

பொன்ஞன மந்திரம் பொறிகிஞ்சு கத்தாகும் பொன்னை மந்திரம் புகையுண்டு பூரிக்கில் பொன்னுகும் வல்லோர்க் குடம்புபொற் பாதமே” என்று சொல்கிரு.ர். பிறர் காது கேட்கப் புகலாது உதட்டள வில் உச்சரிக்கவேண்டும் என்கிற கருத்தைப் பொன்னை மந்திரம் பொறி கிஞ்சுகத்தாகும்’ என்ற அடி நமக்கு விளக்கு கிறது.

'நாமுதல் மந்திரம் விலப்பாடி’ என்பது நக்கீரர் வாக்கு.

"காவடியுள்ளே கவின்று நின்று ஏத்துவர்' என்று நவாக்கரி சக்கரப் பகுதியில் கூறப்பட்டிருப்பதையும் நினைவு கொள்ளலாம். கிஞ்சுகம் உதடு. நா அசையவேண்டுமே தவிர ஒலி வெளிப்படக்கூடாது.

இதுவரையில் கூறப்பட்டுவந்த முறைப்படி வயிரவச் சக்கரத்தை அமைத்து வழிபடுவதால் பயன் என்ன? அதுவும் கூறப்பட்டுள்ளது. -