பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

158

இட்டுவிடுவான். இயமன். நல்லவரைக் கண்டால் நெறுங் கவும் கூசி, அங்கு நிற்கவும் மாட்டான்.

(அ - சொ) காலன் - இயமன். அறம் தருமம். ஒரான் - ஆராயமாட்டான். நனுக - நெருங்க.

(விளக்கம்) கல்லா அரசன் கொடுமை செய்யும் இயல் பினன். இயமனும் கொடுமை செய்பவன். ஆதலின்,கொடுமைப் பண்பில்ை இருவரும் ஒப்பாவார்.

அரசன் நன்னெறியைக் கடைப்பிடிக்க வேண்டும்

70. நாடோறும் மன்னவன் காட்டில் தவநெறி நாடோறும் நாடி அவன்நெறி நாடானேல் நாடோறும் நாடு கெடும்மூடம் கண்ணுமால் நாடோறும் செல்வம் நரபதி குன்றுமே

(இ - ள்) அரசன் ஒவ்வொருநாளும் தன்னாட்டில் தவ நெறியை ஆராய்தல் வேண்டும். அவன் நீதி நெறியை நாடவில்லை என்ருல், நாளும் நாளும் நாடு கெட்டொழியு யும். அறியாமை நெருங்கும். செல்வம் அழியும். அரசனும் அழிவான். -

(அ - சொ) நாடி - ஆராய்ந்து. மூடம் - அறியாமை. நண்ணும் - நெருங்கும். நரபதி - அரசன். குன்றும் - அழிவான்.

(விளக்கம்) அரசன் தவநெறி விட்டு விலகினல் நாடு கெட்டு, செல்வம் குன்றி, அறியாமையில் மிகும் எனப்பட்டது நாள்-தோறும்= நாடோறும்.

வேடத்தின்வழி கிற்க வேந்தன் கவனித்தல் வேண்டும்

71. வேடநெறி கில்லார் வேடம்பூண் டென்பயன்

வேடநெறி நிற்போர் வேடம்மெய் வேடமே வேடநெறி கில்லார் தம்மை விறல்வேந்தன் வேடநெறி செய்தால் வீடது வாகுமே.