பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

፳፻፺

எய்தபோது, அக்குறி தப்பாது அவனுக்குப் பயன் தருதல் போல், உங்கள் குறிக்கோளும் தப்பாது, இறைவனைப் போற்றினல் பயன் உண்டாகும்

(அ - சொ) புல் - அற்ப. புலராமல் - வாடாமல். இல்லம் - மோட்சவீடு. ஏத்துமின் - போற்றுங்கள். இலக்கு - குறி.

(விளக்கம்) புலவர்கள் தம் வறுமை காரணமாகச் செல்வரை நாடி, அவர்களிடம் இல்லாத பண்புகளை அவர்கள் பால் இருப்பனவாகப் புகழ்வர். அப்படிப் புகழந்தும் அச் செல்வர்கள், உலோபிகள் ஆவர். ஆதலின், அவர்களைப் பாடாமல் இறைவனைப்பாட ஈண்டு அறிவுறுத்தப்படுகிறது. அனுபவ ஞானிகள் இக்கருத்தையே அறிவித்துள்ளனர். கொடுக்கிலாதானப் பாரியே என்று கூறினும் கொடுப்பார் இலை’ என்று சுந்தரர் கூறியதை நினைவு கூர்க.

அன்பே சிவம் 89. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவடிாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவதாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப் பாரே. (இ - ள்) உண்மை அறிவு இல்லாதவர் அன்பு வேறு. சிவம் வேறு என்று பிரித்து இரண்டாகக் கூறுவர். அந்தோ! அன்புதான் சிவமாக விளங்குவது என்று உணர்ந்திலரே; இந்த உண்மையான அன்புதான் சிவமாகும் என்பதை அறிந்த பிறகு அன்பே சிவமாக இருப்பதை நுகர்ந்து இன் புற்று இருப்பர்.

(அ - சொ) அன்பு - தொடர்புடையார் இடத்துச் செலுத்தப்படும் ஒர் ஒப்பற்ற பண்பு.

(விளக்கம்) சிவபெருமான் கருணையே உருவமானவன்! ஆதலின், அவன் அன்புவடிவினன் என்பது பெறப்படுகிறது. ஆகவே, அன்பு சிவமாயிற்று. திண்ணனராம் கண்ணப்பர் அன்புப் பிழம்பானவர். ஆகவே, அவர் சிவவடிவினர்.