பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231

231

பிராணவாயுவின் செயலேக் கூறல் 174. ஐவர்க்கு காயகன் அவ்வூர்த் தலைமகன்

உய்யக்கொண் டேறும் குதிரைமற் ருென்றுண்டு மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப் பொய்வரைத் துள்ளி விழுத்திடும் தானே.

(இ - ள்) பஞ்சேந்திரியங்களுக்குக் கணவனுகவும், உடலுக்குத் தலைவனுகவும் உள்ள ஒருவனுக்குத் தான் எங்கும் செல்ல நடத்த குதிரை ஒன்று உண்டு. அஃது உண்மையான அடியவர்கட்குப் பிடி கொடுக்கும். பொய் யர்க்குப் பிடி கொடாது துள்ளி அவர்களைக் கீழே தள்ளி விடும்.

(அ - சொ) ஐவர் . மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து இந்திரியங்கள். உருய செலுத்த. பற்றுக் கொடுக்கும் வசப்படும். -

(விளக்கம்) இப்பாடல் பிராணுயாமம் முறையாகச் செய்ய வேண்டும் என்பதையும், அங்ங்னம் செய்யாதவர் துன்பத்துக் குள்ளாவர் என்பதையும் எடுத்து இயம்புகிறது. நாயகன் ஈண்டு மனமாகும். ஊர் என்றது உடலை என்க. குதிரை என்றது பிராணவாயு ஆகும். மெய் அன்பராவார் இறைவனிடத்து அன்பு கொண்ட பிராணுயாமப் பயிற்சியுடையவர். பொய்யர் ஆவார், இறைவன் பற்று அற்று, உலகப் பற்றுடையராய்ப் பிராணயாமப் பயிற்சியினை முறையாக உணராதவர்கள்.

குருவின் அருளால் பிராணவாயு இனிதுற நடக்கும்

175. ஆரியன் கல்லன் குதிரை இரண்டுள

வீசிப் பிடிக்கும் விரகறி வார்.இல்லை கூரிய நாதன் குருவின் அருள்பெற்ருல் வாரிப் பிடிக்க வசப்படும் தானே.