பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

22

திருவாவடுதுறையினே வந்தடைந்த திருமூலர் அத்தலத்தை விட்டு நீங்காத நிலைமைத்தான ஒரு குறிப்பினுல் இருந்தாரான லும், அத்தலத்தையும் விட்டுப் புறப்பட்டுச் சென்றவர் கண் முன், காவிரிக் கரையின் கண்ணே பசுக்கூட்டங்கள் புலம்பு வதைக் கண்ணுற்றனர். பசுக்கூட்டங்கள் அழுவதைமட்டும் காணுமல், அவ் ஆன் நிரைகளை மேய்க்கும் இடையன் வாழ் நாள் முடிந்த காரணத்தால் அக் காவிரிக்கரையின் மீதே இறந்துபட்டு இருப்பதையும் கண்ணுற்றனர். அவ்விடையன் மூலன் என்னும் பெயருடையன். அவன் சாத்தனூர் அந்தணர் களின் பசுக்கூட்டங்களை மேய்க்கும் குடியில் தோன்றியவன். இடையன் வழக்கம் போல் பசுக்கூட்டங்களை மேய்க்க வந்தவன் அன்று இறந்து விட்டனன்.

பசுக்கள் தம்மைப் பசும்புல் தரையில் மேயவிட்டு, நன்னீர் பருகச் செய்து, மாலை நேரத்தில் தம் தம் இடத்திற்கு அழைத்துச் செல்லும் ஆயன் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டதும், அவனைச் சுற்றிக் கொண்டு கதறின; சுற்றிச்சுற்றி வந்தன: மோந்து மோந்து பார்த்தன. இந்த நிலையினை யோகியரான திருமூலர் கண்டனர். கண்டதும் அவரது உள்ளத்தில் இறைவன் திருவருளால் இப்பசுக் கூட்டங்களுக்கு நேர்ந்த துன்பத்தை ஒழிப்பேன் என்னும் உறுதி பிறந்தது. அதற்கு என் செய்தால் இப்பசுக்களின் துயர் நீங்கும் என்று சிறிது சிந்தித்து, "இவ்விடையன் உயிர் பெற்று எழுந்தால் தான் அக் கோக்குலங்கள் துன்பம் நீங்கும்" என்று முடிவு கட்டிஞர். இங்ங்னம் முடிவுகட்டிய திருமூலர், தமதுஉடம்பை ஒர் இடத்தில் பத்திரப்படுத்தி, இறந்து பட்ட மூலன் உடலில் தம் உயிரைத் செலுத்தினர். இதுவே கூடுவிட்டுக் கூடுபாய்தல் எனப்படும். இவ்வாறு செய்வதும் ஒரு சித்தே. இங்ங்னம் தம் உயிர் செலுத்தப்பட்டதும் மூலன் என்னும் இடையன் உயிரு டன்எழுந்தனன்.உண்மையில் மூலன் எழவில்லை. யோகியே. எழுந்தனர். உடம்பு மூலன் உடம்பு; உயிர் யோகியர் உயிர் தம்மை மேய்க்கும்.இடை யன்உயிருடன் எழுந்ததும் பசுக்கள் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவைகள் தம் நாக்குத்