பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

293

雲g。

திருவடியின் சிறப்பு

259. திருவடி ஞானம் சிவம்ஆக்கு விக்கும்

திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும் திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும் திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.

(இ - ள்) இறைவனது திருவடிகளைத் தொழுதலாகிய உண்மை அறிவே, தொழுபவர்களை இறைவனக்குவிக்கும். இறை உலகமாகிய மோட்ச உலகில் கொண்டு சேர்ப் பிக்கும். ஆன்மா மலத்தால் அடைபட்டுக் கிடக்கின்ற கட்டினே அவிழ்த்து மீட்பிக்கும். அத் திருவடி ஞானம் வளமான எண்வகைச் சித்திகளையும் மோட்சத்தையும் கொடுக்கும்.

(அ - சொ) மலம் - அழுக்கு. முத்தி - மோட்சம். (விளக்கம்) மலம் என்பது ஆன்மாவை இறைவனுடன் சேராதபடி தடுத்து நிற்கும் அழுக்காகும். அவையே ஆணவம்: கன்மம், மாயை எனப்படும். சித்திகள் என்பன அணிமா, கரிமா, லகிமா, மகிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. இவற்றின் விளக்கம் அட்டமா சித்தி என்ற இடத்து எழுதப்பட்டது. ஆண்டுக் காணவும்.

இறைவன் இணையடிகளே எல்லாம்

260. மந்திரம் ஆவதும் மாமருந் தாவதும்

தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும் சுந்தரம் ஆவதும் தூய்நெறி ஆவதும் எந்தை பிரான்தன் இணயடி தானே.

(இ- ள்) மந்திரம், மருந்து, தந்திரம், உலகம், அழகு,

நல்வழி ஆகிய இவை யாவும் எமது தலைவனும் இறைவன் திருவடிகளே ஆகும்.