பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

325

荔

ஆண்வ மலத்தால் அடைந்துள்ள் நிலை 306. மலக்கலப் பாலே மறைந்தது சத்தி

மலக்கலப் பாலே மறைந்தது ஞானம் மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு மலக்கலப் பற்ருல் மதிஒளி ஆமே, (இ - ள்) ஆணவமலம் ஆன்மாவோடு கலந்திருப்பதால் உடலின் ஆற்றல் ஒடுங்கி விடுகிறது. மெய்ஞ்ஞானமும் மறைந்துவிடுகிறது. இறைவனும் மறைந்து விடுகின்றனன். ஆகவே இந்த ஆணவமலக் கலப்பு நீங்கினல் அறிவ் ஒளி உண்டாகும்.

(அ சொ) மலம் - அழுக்கு. சக்தி - வன்மை. ஞானம் - பிரம்மஞானம். தானு - இறைவன். மதி அறிவு.

(விளக்கம்) ஆணவத்திற்கு உயிரை அடக்கியாளும் தன்மை உண்டு. அதல்ை ஆன்மாவின் சத்தியும் அறிவும் மங்கிப் போகும். இறைவனது காட்சியைப் பெறுவதற்குத் தடை ஏற்படுகிறது. அவ் வாணவமலம் ஒழிந்தால் ஆன்மா வின் அறிவு ஒளியுடன் தெளிவுடன் விளங்கும். மலம் என்பது அழுக்கு: அவ்வழுக்கு ஆணவமல அழுக்கு; ஞானம் . என்பது இறைவனே அறியும் பிரம்ம ஞானம்.

நன்மை தீமைகட்கு காமே காரணர்

307. தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும்

தானே தான்செய்த வினப்பயன் துய்ப்பானும்

தானே தனக்குத் தலைவனும் ஆமே.

(இ - ள்) நாம்தாம் பகைமைக்கும், நட்புக்கும் காரணர்; மறுமை இன்பங்களேயும், இம்மைத் துன்பங்களே யும் அனுபவிப்பதற்குக் காரனர்; நாம்தாம் நாம்செய்த நல்வினைப்பயன் தீவினைப் பயன் அனுபவிப்பதற்குக் காரணர்: நம் தலைமை நிலைபெறுதற்கும் நாழே காரணர்,