பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

353

353

(அ- சொ) மூன்று - வாத, பித்த, சிலேத்துமம். ஆண்மை. வீரமான செயல். அனல் எரிக்கும் - நெருப்புப் போல உடம்பை எரிக்கும். குளைச்சு - குடைச்சல், நோதல்.

(விளக்கம்) உடம்பு முழுதும் நோய் உண்டாதலின் பச்சைப் புண் ஆகுமே என்றனர்.

வாதநோய் சேட்டை

346. புண்ணுய் வலிக்கும் பொருமும் குடல்ஒடித்

தண்ணு மலம்அதனைத் தம்பிக்கும் போக்காது ஒண்ணுன ஆசனம் உறவே சுருக்கிடும் பண்ணுர் குளிர்சீதம் பகுத்திடும் வாதமே.

(இ - ள்) புண்ணின் வலிபோல உடம்பு முழுதும் வலி எடுக்கும். வயிற்று வலி, குடல் இரைச்சல் ஏற்படும். மலம் கட்டிவிடும். மலம் வரும் வழி சுருங்கிப் போகும். உடல் குளிர்ந்து விடும். -

(அ - சொ) பொருமும் - இரைக்கும். தம்பிக்கும் - கட்டி விடும். ஆசனம் - மலம் வரும் வழி. தண்ணம் - குளிர்ச்சி ஆம். ஒண்ணுன ஒன்றன.

(விளக்கம், மலம் வருவதற்கு ஆசனம் ஒன்றே வழி ஆகவே அதனை ஒண்ணுன ஆசனம் என்றனர். ஒன்ருன என்பது மருவு வழக்குப்படி ஒண்ணுன என்று ஆயது. - பித்த மிகுதியால் வரும் துன்பங்கள் 347. பகுத்திடும் பித்தம் பலபல சிந்தையாம்

வகுத்திடும் வாந்தியும் வாய்நீர் மிகஊறும் மகுத்திடும் மேனியில் மாட்டிஎரிப் பேறும் மிகுத்துத் தவனிக்கும் மிகவிட்ம் கைக்குமே.

த.-23