பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

திருமூலரும் போதியின் அடியில் இருந்ததை, "சேர்ந்திருந்தேன்சிவ மங்கைதன் பங்கனைச் சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை சேர்ந்திரூக் தேன்சிவ போதியின் நீழலில் சேர்ந்திருக் தேன்சிவன் நாமங்கள் ஓதியே” என்றும், "நானும் இருந்தேன் நற்போதியின் கீழே’ என்றும் அறிவித்தல் காண்க.

இவையே திருமூலர் வரலாற்றிற்குரிய அகச்சான்றுகள். அங்கிருத்து, அவர் பொதிகை காணச் சென்றதாக அவர் வாக்கில் இல்லை. திருவாவடுதுறையிலிருந்து கயிலாயம் சென்ருர் என்ற குறிப்புமட்டும் சேக்கிழார் வாக்கில்,

சென்னிமதி அணிந்தார்தம் திருவருளால் திருக்கயிலை தன்னில்அணங் தொருகாலும் பிரியாமைத் தாளடைந்தார்.

என்று காணப்படுகிறது.

திருமூலரது மாளுக்கர்கள் யாவர் என்னும் விளக்கம் பெரிய புராணத்துள் இல்லை. ஆனல் திருமூலர் கூறும் குரு பரம்பரை என்னும் இடத்து, அவரது மாணவர்கள் மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமலையன் என்பவர்கள் என்பது தெரிகிறது. இதனை அவரே, . . .

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்

இக்திரன் சோமன் பிரமன் உருத்திரன்

கந்துரு காலாங்கி கஞ்ச மலையனே

டிந்த எழுவரும் என்வழி யாமே. என்கின்றனர். இம்மந்திரத்தில் வரும் மந்திரம் பெற்ற வழி முறை" என்னும் தொடரும்,"இந்த எழுவரும் என் வழியாமே” என்பதும், அவரது பரம்பரையின் விளக்கம் தெளிவித்தல் 蘇r窗懿。