பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364

364

(அ - சொ) அதுபோகம் - சுகபோகம். தனி - ஒப்பற்ற. காடி - புளித்த நீர்

(விளக்கம்) பச்சுடம்பு என்றது சீதளம் பொருந்தி இருக்கும் உடம்பு. அதாவது குழந்தை பெற்ற காரணத்தால் வலுக்குன்றிச் சோர்வுற்றிருத்தல். மாப்பண்டம் அஜீரணத்தை உண்டாக்கி நோயை உண்டு பண்ணும். ஆதலின் கரு உயிர்த்தவளுக்கே அன்றி எல்லார்க்கும் திங்கு விளைத்தலின் ஆர்க்கும் என்றனர்.

மேகரோகம் தீர வழி

363. பார்த்திடும் மேகம் பகர் இரு பத்தொன்றும்

போற்றிடும் அப்பிரகம் பொலிவான சிந்துாரம்

சேர்த்திடும் சீந்தில் செவ்வாம் சருக்கரை மாற்றிடு வெண்ணெயில் மாமேகம் போகுமே.

(இ - ள்) மேகநோய் இருபத்தொன்று. அந்நோய் சிறப்பித்துக் கூறப்படும் அபிரேகமாம் செந்துாரத்தில் சீந்தில் சருக்கரையையும், நல்ல அன்று கடைந்தெடுத்த வெண்ணெயையும் சேர்த்து உண்டு வந்தால், நீங்கிப் போகும்.

(அ - சொ) பகர் - சொல்லப்படுகின்ற. சிந்துாரம் செம்மையான பொடி. பொலிவான - நன்கு விளக்கமான.

(விளக்கம்) அபிரேகம் விரைவில் செந்துாரமாவது கடினம். அப்படி அது செந்தூரத் துாளாகிவிட்டால் அதனல் மேகநோய் நீங்கல் உறுதி. ஆகவே, அதனைப் போற்றிடும் அபிரகம் என்றனர். அதனல் ஆன செந்தூரத்தைப் பொலி வான சிந்துரம் என்றனர். அபிரேகம் நன்கு பொடியாகி யுள்ளது என்பதை அறிய, அப் பொடியில் சிறிது எடுத்து உள்ளங்கையில் தடவிச் சூரிய வெளிச்சத்தில் காட்ட