பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 கவியரசர் முடியரசன் 0 111

மாமுழுதும் வேர்பலவாய் ஊன்றிக் கிளைக்கவிட்டோம்: சாதிக்கு நன்மதிப்பு சற்றே குறைந்தாலும் விதிக்குள் வீட்டுக்குள் வீறு குறையவில்லை; 16O எல்லாரும் ஓரினமென் றெண்ணி நடக்கவெனச் சொல்லாத ஏடில்லை, சொல்லாத் தலைவரிலை; இன்னும் மதவெறியை எள்ளளவும் போக்கவிலை என்னும் படியிங்கே எங்கும் மதச்சண்டை: அண்ணல் நடந்த அடிச்சுவட்டைக் காணவில்லை மண்ணெடுத்துத் துவி மறைத்து நடக்கின்றோம்; எத்தனையோ கல்துரம் ஏந்தல் நடந்துவந்தார், அத்தனையும் அச்சுவடு தோன்றா தழித்துவிட்டோம்; அன்னவர்க்கு மண்டபங்கள் அங்கங்கே கட்டிவைத்தோம் சொன்னவற்றை மட்டும் தொலைவில் கட்டிவைத்தோம்; 17O நல்லோன் எடுத்துரைத்த நல்ல கருத்தெல்லாம் உள்ளே நுழையாமல் உள்ளத்தைப் பூட்டிவிட்டோம்: தந்தைக்கு நாம்செய்யும் தக்கதொரு கைம்மாறா? சிந்தைக்கும் சொல்லுக்கும் செய்யும் செயலுக்கும் துய்மை கொடுத்துத் தொடர்பு படுத்திஅதை வாய்மை எனஎண்ணி வாழ முயன்றோமா? ஆர்ப்பரிப்பும் பூசனையும் அண்ணல் விழைவதில்லை ஏற்புடைய வாய்மையே என்றும் உகந்திருந்தார்;

அண்ணல் நடந்த அடிச்சுவட்டைப் பார்த்ததன்மேல்

எண்ணி நடப்போம் இனி. 一 18O

காந்தி நூற்றாண்டு விழா, * ir *- அரூா

_சேலம் மாவட்டம்

  • ===