பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 கவியரசர் முடியரசன் 0 17

நின்று முகமலர்ந்தாள் நீள்விழியில் நீர்துளித்தாள்:

பாடு மகனேநீ பாடடா என்புகழை, நீடுதுயில் நீங்கி நிமிர்ந்தெழுந்து பாடடா: கேடு தொலைந்ததெனக் கீழ்வான் சிவந்ததென நாடு சிறந்ததென நாளும்நீ பாடடா: வானிற் பறந்துவந்து வட்டமிட்டுப் பாருலகை மேனின்று பாரடா மேன்மைஎலாம் பாடடா: 80 சிம்புட் பறவைஎனச் செப்பினான் உன்முன்னோன் தெம்புளத்தே கொண்டு சிறகை விரித்தெழுவாய், - வாபறந்து வானில் ഖ്ഥr} சுழன்றுதிரி / 友て நீபறந்து வந்தால் நிலமெல்லாங் கண்டிடுவாய்', என்றமொழி கேட்டேன்நான் எப்படி வான்பறப்பேன் என்றயர்ந்தேன்; அஃதுணர்ந்த என்னன்னை மூரலித்துச் செல்வ மகனே சிறகிருந்தும் நீயறியாய் சொல்வ துடையேன் சொலுமுன்னே மேலெழுவாய்; உள்ளத்தே வற்றாமல் ஊறிவரும் பேருணர்ச்சி வெள்ளத்தை ஓர்பால் விரிசிறகாக் கொண்டிடுக; 90 கற்ற இலக்கணத்திற் கண்ட திறமெல்லாம் - மற்றோர் சிறகா மதித்துணர்ந்து கொண்டெழுக; கற்பனையாம் வானிற் கடுகிப் பறந்துவிடு, அற்புடைய பூமிக்கும் அப்பாலே வந்துவிடு. பாடும் பறவையடா பாடி மகிழ்ந்திடடா: வாடும் நிலைஎதற்கு வாவா விரைந்தென்றாள்; கண்ணை யிமைக்குமுன் கற்பனையில் ஏறிவிட்டேன் மண்ணை மறந்தேன் மகிழ்ச்சிக்கோர் எல்லையிலை; விண்ணிற் பறந்தேன் விழையுந் திசைஎல்லாம் நண்ணித் திரிந்தேன் நற்றாய் உடன்வந்தாள்: -- 1OC ஆங்கிருந்து பார்த்தேன் அடடாஒ மண்பரப்பில் - --

__5.4°-22.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/16&oldid=571624" இலிருந்து மீள்விக்கப்பட்டது