பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏮO * தமிழ் முழக்கம் 9

மாமுடிகள் தாங்கிவரும் மாமன்னர் மூவர்க்கும் ஆமுரிய நீள்கதையை ஆக்கும் பெருமகனார் 120 கோடுயர்ந்த ஞாலத்தின் கோவடிகள் அன்னவர்தாம் கோடுதல் இல்லாமல் கோல்முனைபோல் நேர்நின்று மூவர்க்கும் ஒர்நிகரில் யாவர்க்கும் ஏல்வகையில் காவியத்துட் பாடல் கடனாகும் ஈதுணர்ந்தும் பாண்டியற்குஞ் சேரனுக்கும் பாடுமொரு மங்கலமாம் ஈண்டுபுகழ் வாழ்த்தொன் றியம்பாத காரணமென்? குற்றமற்ற கோவலனைக் கோலேந்தும் பாண்டியன்தான் பற்றித் திருடனென வெட்டிக் கொலைசெய்து கண்ணகிக்கு மாறாத கண்ணிர் விளைவித்த பெண்பழிக்கு நாணித்தான் பேசா திருந்தனரோ? 130 கற்புடைய பெண்மகளைக் காணுங் கடவுளெனப் பொற்புடனே ஓர்சிலையாப் பூசித்துக் கற்கோவில் ஆக்கிப் படைத்த அருந்திறலோன் சேரனுக்குத் தேக்குபுகழ் மங்கலமே செப்பாத தென்கருதி? தன்னாட்டான் ஒர்வயிற்றுள் தன்னோ டுடன்பிறந்தான் முன்காட்டும் இந்த முறைமையினால் கூசினரோ? பாடி யிருந்தொருகால் தேடியலைவோர்க்குக் கூடி யடையாமல் ஒடி ஒளிந்ததுவோ? ஆரே அறிவார் அதனுண்மைக் காரணத்தை! நேரே சிலம்பில் நினைவைப் பதியவைத் 140 தின்னும் நுணுகி அணுகுங்கால் எத்துணையோ பொன்னும் மணியும் புதிதுபுதிதாப்பெறலாம் கூடும் நலமனைத்தும் கூர்ந்துணர்வீர் நம்மிளங்கோ பாடுஞ் சிலம்பைப் படித்து.

கண்ணகி விழா திருச்செங்கோடு 25. 5. 1966 கோல் -தராசு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/59&oldid=571665" இலிருந்து மீள்விக்கப்பட்டது