பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னும் சங்கப் புலவர்களின் வைர வரிகளுக்குச் சான்றாக வாழ்ந்து காட்டிய பெருமித வாழ்வு முடியரசன் வாழ்வு.

50-70 களில் நடைபெற்ற கவியரங்குகளில் தலைமையேற்றுப் பாடிய பாடல்கள் தமிழ் உணர்ச்சிப் பிழம்புகள். பங்கேற்றுப் பாடிய பாடல்கள் பல, இளைஞர்களின் தசைநார்களை வலிமைப்படுத்துவன.

இவரின் பழந் தமிழ்ப்புலமை, மொழி வளம், சொல்லாக்கம் இவர் கவியரங்கக் கவிதைகளில் இவருக்குத் தனிச் சிறப்பைத் தந்தன. தலைவராய் விற்றிருந்து பாடிய கவிதைகள் பெருமிதக் கவிதைகள். கவியரங்குகளில் இவர் தாம் இயற்றிய பாடல்களை ஒலிநயம் குன்றாமல் தெளிவான உச்சரிப்புடன் பாடிய பாங்கு இவரை இனம் பிரித்து அடையாளம் காட்டியது.

இவரின் கவியரங்கக் கவிதைகள்-தனிநூலாக வந்து ل. ډهلا

பதிப்புகளைப் பெற்றன.'கரைக்குடி-ஒத்தண்_ள்ளியில் இவர் ஆசிரியராய் இருந்து எழுப்பிய முழக்கங்கள் எண்ணில. இந்தப் பட்டறையில் உருவான வாள்கள் பல. அனிச்ச அடிக் கவிஞர் பாவலர் பழனி போலப் பலர் இவர் வழியில் இன்றும் தமிழ் முழக்கம் செய்கின்றனர்.

திராவிட முன்னேற்றக்கழக எழுச்சிக் காலத்தில் இவர் பாடல்கள் மாற்றுக் கட்சியினர்க்கு இடி முழக்கமாய் அமைந்தன. இடியைக் கண்டு அஞ்சும் நாகமென மாற்றார்

மருண்டனர். கொள்கை உறுதி இவர் சொல்லுறுதியில் வெளிப்பட்டது. செம்மாந்த பெரு வாழ்வு வாழ்ந்த

இப்பெருமிதக் கவிஞரின் தமிழே, உயிரே என்னும் இசைப்பாடல் அன்றும் இன்றும் நாடெங்கும் ஒலிக்கிறது. யாப்புப் பிற்ழ்ச்சி யில்லாத இசைப்பாடல் இயற்றி, தமிழிசைக்கு வளம் சேர்த்த முடியரசனாரின் தமிழ்ப்பணி தனி ஆய்வுக்கு உரியது. கவிஞர் பெருமகனாரை 40 ஆண்டுகளாக நான் நன்கறிவேன். இவர்தம் பூங்கொடியை வெளியிட்டுப் புகழ்பெற்றோம்; பூரித்தோம். தமிழ் வழிபா

Jo

5

-

y

ங்

.

i.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/7&oldid=571616" இலிருந்து மீள்விக்கப்பட்டது