உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

195

சிலபேர் பிரசங்க மாரி பொழிவார்கள். அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது மட்டும் கேட்பவர்களுக்குத் தெரியாது, "பெரியவர் அபாரமாய் பேசினார்; ஆனால், அவ்வளவு பெரிய விஷயங்கள் நமக்கெல்லாம் புரியுமா?" என்று சொல்லிக் கொண்டு பேசுவார்கள். ஆனால், சுவாமிகள் பேச்சு இப்படியல்ல, அவர்கள் பிரசங்கத்தைப் படித்தவர்களும் ரஸிப்பவர்கள்; பாமரர்களும்விஷயம் இன்னதென்று தெரிந்து கொள்வார்கள். மணிமணியாக, முத்து முத்தாக சுவாமிகள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நம் மனதில் என்றும் அழியாதவாறு பதிந்துவிடும். எப்படிப்பட்ட சிக்கலான சமய உண்மையையும் சிக்கறுத்துச் சொல்வார்கள்.

"உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்"

என்னும் கவியின் வாக்கை சுவாமிகள் சொற்பொழிவுகள் மெய்ப்படுத்தும்.

ஸ்ரீ ஞானியார் சுவாமிகள் திருப்பாதிரிப்புலியூர்மடாதி பதியாகி இந்த மாதத்தோடு ஐம்பது வருஷங்கள் பூர்த்தியாகின்றன. இந்த ஐம்பது வருஷ காலத்தில் சுவாமிகள் ஆயிரக்கணக்கான சமயப் பிரசங்கங்கள் செய்திருப்பார்கள். லட்சக்கணக்கான ஜனங்களுக்கு சைவ சமயத்தின் உண்மைகளை எடுத்துப் போதித்திருப்பார்கள். எவ்வளவோ பேருடைய வாழ்க்கையைத்தமது உபதேசங்களால் புனிதப் படுத்தியிருப்பார்கள். சுவாமிகள் சமயப்பணி செய்வதுடன் தமிழ்ப்பணியும் செய்து வருகிறார்கள். எத்தனையோ பேருக்குத் தமிழ் அன்பையும், தமிழ் அறிவையும் ஊட்டி யிருக்கிறார்கள். அரசாங்க உதவியின்றி ஒரு தமிழ்க் கல்லூரியும் நடத்தி வருகிறார்கள்.

சுவாமிகளின் தமிழன்பு, தமிழ்ச் சுவையின் அனுபவ உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. "தமிழ், பரமசிவன் அருளிய மொழி என்பதற்காக மட்டும் அவர் தமிழைப் போற்றுகிறவர் அல்ல. இத்தகைய தமிழன்பர்களும் சிலர் இருக்கிறார்கள். பரமசிவன் அருளிய தமிழாயிருந்தாலும், அதில் வேறு தெய்வங்களைப் போற்றும் நூல்களை அவர்கள் மதிப்பதில்லை. இராமாயணத்தின் கதாநாயகன் இராமன் என்பதற்காகவே அவர்கள் கம்பராமாயணத்தை "மட்டம்" என்று தள்ளிவிடுவார்கள். ஆபாசங்கள் நிறைந்த எட்டாந்தர ஸ்தல புராணமானாலும், விஷ்ணுவைக் கொஞ்சம் மட்டந்-