பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9. நெல்லைத் திருக்கோவில்

திருக்கோவில் பெருமை

‘ஊரானார் தேவகுலம்’ என்பது பழைய இலக்கண உரையாசிரியர்கள் எடுத்தாளும் தொடர். ‘தேவகுலம்’ என்ற தொடர் திருக்கோவிலைக் குறிப்பது. தெய்வபத்தி முதிர்ந்த தமிழ்நாட்டில் ஊர்தோறும் இறைவனுக்குக் கோவிலெடுத்து வழிப்பட்டனர் நம் முன்னேர். அதனாலேயே ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற உறுதிமொழி உலக நீதியாக உலவலாயிற்று.

பன்னூறு ஆண்டுகட்கு முன்னரேயே இறைவன் திருக்கோவிலைக் கற்றளியாக அமைத்துக் காணும் அரிய பண்பு நம் காட்டு மன்னர்பால் வேரூன்றி விளங்கிற்று. என்றும் அழியாது நின்று நிலவும் ஈசனுக்கு என்றும் அழியாது நின்றிலங்கும் கற்கோவிலை அமைத்து வழிபட்டனர் முன்னைய மன்னர்கள். அம் முறையில் பாண்டிய மன்னரால் அமைக்கப்பெற்ற அரிய கோவிலே திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலியில் திகழும் நெல்லையப்பர் திருக்கோவில்.

‘நித்தம் திருநாளாம் நெல்லையப்பர் தேரோடும்’ என்று சொல்லும் தாய்மார்கள் வாய்மொழி பழமொழியாக வழங்கும். திங்கள்தோறும் நெல்லையப்பருக்குத் திருவிழா நடைபெற்றுக் கொண்டே யிருக்கும். ‘தேரோடும் திருவீதி’ யென்றால் திருநெல்வேலித் தேர் வீதிகளைத்தான் சொல்ல வேண்டும். மாதம் தவறினாலும் வீதியில் தேரோடுவது மாதம் ஒருமுறை